தமிழ்நாடு
ஜெயலலிதா இல்லத்தை வாங்க ஏதுவாக 68 கோடியை டெபாசிட் செய்தது தமிழக அரசு...!
ஜெயலலிதா இல்லத்தை வாங்க ஏதுவாக 68 கோடியை டெபாசிட் செய்தது தமிழக அரசு...!
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக நீதிமன்றத்தில் 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளது.
வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா செலுத்த வேண்டிய 36 கோடி ரூபாய் மற்றும் வாரிசுகளான தீபக் மற்றும் தீபாவிற்கு நிவாரணமாக 32 கோடி ரூபாய் என 68 கோடி ரூபாயை சிட்டி நகர முதன்மை நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் மற்றும் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய பணம் முழுவதையும் வங்கியில் டெபாசிட் செய்து போயஸ் தோட்ட இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முயற்சிசித்து வந்த நிலையில் தற்போது இந்த தொகையை நீதிமன்றத்தில் செலுத்தி உள்ளது. ஒரு சதுர அடி 12,000 ரூபாய் என கணக்கீடு செய்து வாரிசுகளுக்கு நிவாரணம் கொடுக்கும் வகையில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.