விரைவுச் செய்திகள்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பதுங்கல்? | டிவிட்டர் புதிய விதி்முறைகள்

விரைவுச் செய்திகள்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பதுங்கல்? | டிவிட்டர் புதிய விதி்முறைகள்

விரைவுச் செய்திகள்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பதுங்கல்? | டிவிட்டர் புதிய விதி்முறைகள்

+2 பொதுத்தேர்வு ரத்தா? - ஓரிரு நாளில் முடிவு: தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

சென்னையில் மணிகண்டன் பதுங்கலா?: பாலியல் புகாருக்கு ஆளான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மணிகண்டனுக்கு நெருக்கமான நண்பர்களிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளது.

தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படவில்லை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருவதாகவும் நம்பிக்கை அளித்துள்ளார்.

பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

குடும்ப வாழ்க்கை சிறக்க 'ஈகோ'வை கைவிடுங்கள்: தம்பதிகள் ஈகோ, சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றை காலணி போன்று வீட்டிற்கு வெளியிலேயே விட்டுவிட வேண்டும் என்றும், குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்படுமாறும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கோயில்களில் தீ விபத்தை தடுக்க கோரி முறையீடு: தமிழகத்திலுள்ள பழமையான கோயில்களில் தீ விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்.

1,742 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: கொரோனா தொற்றுக்கு இதுவரை 1,742 குழந்தைகள் பெற்றோரை இழந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

மீண்டும் 3ஆயிரத்தை கடந்தது உயிரிழப்பு: இந்தியாவில் 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 2 லட்சத்து 31 ஆயிரம் பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மனிதனுக்கு பரவியது H10N3 பறவைக் காய்ச்சல்: மனிதனுக்கு முதல்முறையாக H10N3 என்ற பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. சீனாவின் ஜென்ஜியாங் நகரில் 41 வயது நபருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை பிணவறைக்குள் சென்று உறவினர்களே எடுத்து சென்ற விவகாரத்தில் ஊழியர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்து தேனி அரசு மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

புதிய விதிமுறைக்கு இணங்கியது டிவிட்டர்: மத்திய அரசின் டிஜிட்டல் மீடியா விதிமுறைகளுக்கு ட்விட்டர் இணங்கியது. நீண்ட இழுபறிக்குப் பின் சட்டத்திருத்தங்களை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com