ரசிகர்கள் வீசிய மாலையை தோளில் அணிந்துகொண்ட விஜய்... த.வெ.க. தலைவரான பின் முதல் சந்திப்பு!

கட்சி தொடங்கிய பின்னர் முதன்முறையாக ரசிகர்களை சந்தித்து நடிகர் விஜய் அன்பு மழை பொழிந்தார்.

தமிழக வெற்றி கழகத் தலைவரான விஜய், தான் ஒப்பந்தம் செய்துள்ள GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

புதுச்சேரியில் உள்ள ஏ.எஃப்.டி. பஞ்சாலையில் அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அப்படி நேற்று நடந்த படப்பிடிப்பின்போது விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பஞ்சாலை வாயிலில் குவிந்தனர்.

இதையறிந்த விஜய், தனது வழக்கமான பாணியில் படப்பிடிப்பு வாகனத்தின் மேலே ஏறி ரசிகர்களை நோக்கி கையசைத்து உற்சாகப்படுத்தினார்.

நடிகர் விஜய்
காலை தலைப்புச் செய்திகள் | கொங்கு மண்டலமும் பாஜகவும் - தோழர்கள் அன்பில் நனைந்த விஜய்!

அப்போது, மலர்களையும் மாலைகளையும் விஜய் மீது வீசி ரசிகர்கள் அன்பு மழை பொழிந்தனர். ரசிகர்கள் வீசிய மாலையை எடுத்து தானே தோளில் அணிந்துகொண்ட விஜய், அவர்களை நோக்கி ஃப்ளையிங் கிஸ் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.

மேலும், தனது பாணியில் ரசிகர்களுடன் செல்ஃபி புகைப்படமும், வீடியோவும் விஜய் எடுத்துக் கொண்டார். விஜய் ரசிகர்களின் கூட்டம் காரணமாக புதுச்சேரி - கடலூர் சாலையில் அரை மணி நேரத்திக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com