தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt web

TVK | கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பு... தவெக செயற்குழு கூட்டத்தில் திட்டமிடப்பட்டிருப்பது என்ன?

தவெக தலைவர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த செயற்குழு குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
Published on

தவெக தலைவர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இந்த செயற்குழு கூட்டத்தில் தேர்தல் பணி, கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி அஜித்குமார் கொலை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவை தொடர்பான கண்டன தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. 15 முதல் 20 தீர்மானங்கள் வரை நிறைவேற்றப்பட இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், முதல் இரண்டு தீர்மானங்களை விஜய் வாசிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் மற்றும் அண்ணா தொடர்பாக வெளியிடப்பட்ட காணொளிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒரு தீர்மானமும், பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

தவெக தலைவர் விஜய்
மின்வாரிய அலுவலகத்தில் படுத்து தூங்கிய ஊழியர்கள்..!

தேர்தலை ஒட்டி விஜயின் சுற்றுப்பயணம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற இருக்கிறது. இந்த சுற்றுப் பயணத்தில் மூன்று விதமாக மக்களைச் சந்திக்க விஜய் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுக்கூட்டம், சாலையோரங்களில் சிறு சிறு கூட்டம் மக்களை நேரடியாக சந்திப்பது என்று மூன்று விதமாக இந்த சுற்றுப்பயணம் நடைபெற இருக்கிறது. எனவே, இந்த சுற்றுப்பயணம் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

கட்சியில் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம் முடிந்திருக்கக்கூடிய நிலையில், ஒன்றிய அளவிலும் பகுதி அளவிலுமான நிர்வாகிகள் நியமனத்தை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. மிக முக்கியமாக கூட்டணி தொடர்பான முக்கியக் கருத்து ஒன்றை விஜய் தெரிவிக்க இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக தலைவர் விஜய்
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு... எங்கே எப்போது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com