\
Tamil Sangam to Be Established at Tamil Nadu Secretariat: Minister
ராஜ்மோகன்Pt web

”தமிழ்ச் சங்கத்தின் தலைவராக முதல்வர்” - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம் அமைக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
Published on: 

மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி அன்றைய சென்னை மாநிலத்தின் தமிழ் பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இன்றைய தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1 தமிழக அரசு கொண்டாடி வருகிறது. அந்தவகையில், இன்று சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

தமிழ்நாடு விழா
தமிழ்நாடு விழாPt web

இந்த விழாவை, தமிழ் வளர்ச்சி, பள்ளிக்கல்வி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், வன்னி அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், "தமிழ்நாடு என பெயர் வைத்த நாளான ஜூலை 18-ம் தேதியை நாம் தமிழ்நாடு நாளாக இன்று வரை கொண்டாடி வந்தோம். ஆனால், தமிழ்நாடு உருவான நாளான நவம்பர் 1-யையும் தமிழ்நாடு நாளாக முதல்வர் விஜய் தற்போது அறிவித்திருக்கிறார் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ”தமிழ் பண்பாட்டை வலியுறுத்தும் வகையில், அரசு அலுவலகங்களில் அலுவலகர்கள் வாரம் ஒரு நாள் வேட்டி சட்டை அணிந்து வரும் வகையில், மரபாடை தினம் கொண்டு வரப்படும். இது, பண்பாடு மட்டுமின்றி நெசவாளர்களுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும்.

அதேபோல, முதல்வர் விஜய் ஆணைக்கிணங்க, தலைமைச் செயலகத்தில் தமிழ்ச்சங்கம் அமைக்கப்படும். ஏற்கனவே, இருக்கும் சங்கங்களையும் ஒருங்கிணைக்கப்படும். இதன் தலைவராக முதல்வரே இருப்பார்.

மேலும், உலகத் தமிழ் மாநாடு மீண்டும் உலகெங்கில்லும் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Tamil Sangam to Be Established at Tamil Nadu Secretariat: Minister
5 தொகுதி இடைத்தேர்தல்.. முதல்வர் விஜயின் அதிரடித் திட்டம்?