‘திடக்கழிவு மேலாண்மை விதிகளை கடைபிடிக்கவில்லை’ - தமிழகத்திற்கு ரூ.15,419 கோடி அபராதம்!

நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் சுற்றுச்சூழல் விதிகளை கடைபிடிக்காத காரணத்திற்காக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழகத்திற்கு 15,419 கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது.
tn govt
tn govtpt desk

நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் சுற்றுச்சூழல் விதிகளை கடைபிடிக்காத காரணத்திற்காக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழகத்திற்கு 15,419 கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது. மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே தாக்கல் செய்த பதிலில், இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

glass waste
glass wastept desk

2022-23 ஆம் நிதியாண்டில் மொத்தமாக மாநிலங்களுக்கு 79,098 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த பட்டியலில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. 12,000 கோடி ரூபாயுடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும், 9,688 கோடி ரூபாயுடன் மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

tn govt
பொன்முடி வழக்கு தீர்ப்பு: இதுவரை ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்தவர்கள் யார் யார்?-முழு விபரம்

28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் 4,703 நீர் நிலைகளில் தண்ணீரின் தரத்தை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்கிறது. அதேபோல, திடக்கழிவு மேலாண்மை பணிகளை கண்காணிக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம், விதிகளை சரிவர பின்பற்றாத மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அபராதம் விதித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com