\
Tamil Nadu Vijay Govt Agriculture Budget 2026 Updates
ஆர்.வினோத்புதிய தலைமுறை

விவசாயி விருது முதல் இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் வரை.. விஜய் அரசின் வேளாண் பட்ஜெட்!

2026-27ஆம் ஆண்டுக்கான வேளாண் மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட்டை அமைச்சர் ஆர். வினோத், இன்று சட்டசபையில் தாக்கல் செய்து வருகிறார். அதில் இடம்பெற்றுள்ள முக்கியமான அம்சங்கள் குறித்து இங்கு பார்ப்போம்...
Published on
  • அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்திற்கு ரூ.56.72 கோடி நிதி ஒதுக்கீடு; இதன்மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறுகுறு விவசாயிகள், உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20% கூடுதல் மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மின்மோட்டார் சூரிய சக்தி பம்புசெட்டுகள் 300 ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகளுக்கு 100 சதவீத மானியம்.

  • மழை, வெயிலிலிருந்து விளைபொருட்களைப் பாதுகாக 43,500 தார்பாய்கள்; இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு

  • மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிக்கான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும்; 10 பயிர்களுக்கு ரூ.50 இலட்சம் பரிசுத் தொகை

  • மாவட்ட அளவில் வெற்றி விவசாயி விருது; 9 பயிர்களுக்கு ரூ.67.50 லட்சம் பரிசுத்தொகை

  • விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது: ரூ.11 லட்சம் பரிசுத்தொகை

  • விவசாயிகளின் அனைத்துத் தேவைகளுக்கும் ஒரே முகவரியில் 8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கை மையங்கள்; ரூ.27.82 நிதி ஒதுக்கீடு

  • வேளாண் கண்காட்சி - தொழில்நுட்பமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழா; ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

  • விதை சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள்: ரூ.7.1 கோடி நிதி ஒதுக்கீடு

  • 17,315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியம்; ரூ.9.36 கோடி நிதி ஒதுக்கீடு

  • பனைப் பாதுகாப்பு இயக்கத்திற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு; இதன்மூலம் பனை விதைகள், பனங்கன்றுகள் விநியோகம் அளிக்கப்படும்.

  • வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டத்திற்கு ரூ.10 நிதி ஒதுக்கீடு

  • தமிழ்நாடு தளிர்கீரைகள் திட்டத்திற்கு ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு

  • தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்த உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகள்; இதற்காக ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு

  • தென்னை சார்ந்த பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்ய ஏதுவாக தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.5.30 கோடி நிதி ஒதுக்கீடு

  • தரமான பருத்தி உற்பத்தியைப் பெருக்கிட ஏதுவாக பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.27.21 கோடி நிதி ஒதுக்கீடு

  • நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.785 கோடி நிதி ஒதுக்கீடு

  • விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமைக்காக வேளாண் காடுகள் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.17.70 கோடி நிதி ஒதுக்கீடு

  • வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்காக ரூ.22 கோடி மதிப்பீட்டில் 57 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

  • வேளாண் அமைச்சர் வினோத்பூளூபெரி அவகொடா, கிவி உள்ளிட்டட உயர் மதிப்பு கொண்ட பழ உற்பத்தியை அதிகரிக்க திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 1.87 கோடி நிதி ஒதுக்கீடு

  • 100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்குதல் மற்றும்a 75% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் தூர்வாருதல் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கீடு

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com