\
Tamil Nadu Releases Guidelines for Anna Seer Scheme: Who Can Apply?
அண்ணன் சீர்TN DIPR

அண்ணன் சீர் திட்டம் - யாரெல்லாம் விண்ணபிக்கலாம்? வெளியானது வழிகாட்டு நெறிமுறைகள்!!

’அண்ணன் சீர்’ விண்ணபிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
Published on: 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வென்று முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராக கடந்த மே மாதம் 10-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டிருந்த, வேலுநாச்சியார் படை, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 2,500 உதவித் தொகை, வருடம் 6 சிலிண்டர் வழங்கும் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ், தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம், அண்ணன் சீர் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவார் என எதிர்பார்ப்பு எழுந்தது.

CM vijay
CM vijay ANI

இந்தச்சூழலில் தான், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில் கொடுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மாவட்டம் தோறும் போதைப்பொருள் தடுப்பு பிரிவுகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு பதவியேற்ற அன்றைய தினமே கையெழுத்திட்டிருந்தார். தொடர்ந்து, மகளிர் இலவச பேருந்து பயண விரிவாக்கம், தாய்மாமன் தங்கமோதிரம் திட்டங்களும் தற்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தச்சூழலில் தான், கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி திருமணம் செய்துகொள்ளும் மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதில், ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்குள் இருக்கும் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் வாக்குறுதியில் 5 லட்சம் என உச்சவரம்பு கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது 2.5 லட்சம் என குறைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தனர்.

இந்தச்சூழலில் தான், ’அண்ணன் சீர்’ திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

எப்போது? எப்படி விண்ணப்பிப்பது?

  • திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

  • 05.10.2026 முதல் 15.01.2027 வரையிலான திருமணங்களுக்கு, 15.01.2027 வரை விண்ணப்பிக்கலாம்.

  • அரசு இ-சேவை மையங்கள் அல்லது www.tnesevai.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

யாரெல்லாம் பயன்பெறலாம்?

  • திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.

  • மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும்.

  • திருமண நிதியுதவிக்கான பிற அரசுத் திட்டங்களில் பயன் பெறாதவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களுக்கான செயல்முறை

  • விண்ணப்பதாரரின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் தகுதி சரிபார்க்கப்படும்.

  • தகுதியுடைய விண்ணப்பதாரர் திருமண பத்திரிகையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • தகுதியான ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும்.

  • விண்ணப்ப நிலை குறித்து குறுஞ்செய்தி, வாட்ஸ் ஆப் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

  • திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள், திருமணத்தைத் தமிழ்நாட்டில் பதிவு செய்ய வேண்டும்.

  • தகுதி இல்லாத காரணத்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், அதற்குரிய காரணம் தெரிவிக்கப்படும்.

  • விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும்.

Tamil Nadu Releases Guidelines for Anna Seer Scheme: Who Can Apply?
”எம்ஜிஆர் சாட்டையை சுழற்றியதுபோல்.. விஜய் அறிவிக்கும்” - தொண்டர்கள் முன் ஆவேசமான வைகோ!