மோசமடைந்த காற்றின் தரம்.. எங்கெல்லாம் அதிக பாதிப்பு?

தமிழகத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு தீபாவளியன்று காற்று மாசின் அளவு இரட்டிப்பாக்கியுள்ளது.
காற்று மாசு
காற்று மாசுபுதிய தலைமுறை

தமிழகத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு தீபாவளியன்று காற்று மாசின் அளவு இரட்டிப்பாக்கியுள்ளது. இதன் அடிப்படையில் எந்தெந்த பகுதிகளில் அதிக பாதிப்புகளை சந்தித்தன என்பது குறித்து காணலாம்.

காற்று மாசு
காற்று மாசுபுதிய தலைமுறை

சென்னையில் மணலியில் அதிகபட்சமாக காற்றின் தரக்குறியீடு
322 ஆக பதிவாகியுள்ளது. குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து பட்டாசு வெடித்ததன் காரணமாக அதிக காற்று மாசு ஏற்பட்டுள்ளது.
மேலும் காலையில் எங்கு பார்த்தாலும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. இதனையடுத்து ஆலந்தூரில் - 256 ஆகவும், வேளச்சேரியில் - 308 ஆகவும் காற்று மாசு இருந்தது.

காற்று மாசு
பட்டாசு புகையால் மோசமான சென்னை காற்றின் தரக்குறியீடு! வெளியான ஷாக் தகவல்...

காற்று மாசு கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல் போன்ற பல நோய்களை உண்டாக்கும் என்பதால் கர்ப்பிணிகள், முதியவர்கள் கூடுமானவரை வெளியே செல்வதை  தவிர்க்கலாம். இத்துடன் மேற்கொண்டு காற்று மாசை உண்டாக்கும் பொருள்களை உபயோகிப்பதை குறைத்து கொள்ளவும். சுற்றுச்சூழல் காத்து, உயிரும் நலமும் காப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com