பட்டாசு புகையால் மோசமான சென்னை காற்றின் தரக்குறியீடு! வெளியான ஷாக் தகவல்...

தீபாவளியை ஒட்டி சென்னையில் 4 இடங்களில் மோசம் என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவானது.
காற்றின் தரக்குறியீடு
காற்றின் தரக்குறியீடுமுகநூல்

நேற்று தீபாவளி பண்டிகை வழக்கம்போல் பட்டாசுகளுடன் தமிழ்நாடு முழுவதுமே உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதில் அதிகளவு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் சென்னையில் மணலி, பெருங்குடி, ஆலந்தூர், வேளச்சேரி ஆகிய 4 இடங்களில் காற்றின் தர குறியீடு 200- ஐ தாண்டியது. அரும்பாக்கம், ராயபுரம், கொடுங்கையூரில் 150 என்ற தரக்குறியீட்டை தாண்டியது.

காற்றின் தரக்குறியீடு
சென்னையை ஜொலிக்கவைத்த வானவேடிக்கைகள்... கழுகுப்பார்வை காட்சி!
காற்றின் தரக்குறியீடு
காற்றின் தரக்குறியீடுமுகநூல்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் 255 மற்றும் செங்கல்பட்டில் 231 என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்தது. இதேபோல் வேலூர், கடலூர், புதுச்சேரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றின் தரம் 150ஐ எட்டியது. தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவாக நீலகிரியில் காற்றின் தரம் 20 ஆக பதிவானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com