சேலம் கூட்டத்தில் விஜய்
சேலம் கூட்டத்தில் விஜய்Pt web

’வீட்டை விட்டு, பனையூரை விட்டு வெளிய வா..’ - விமர்சனத்துக்கு விஜய் பதிலடி!

"ஹே விஜய் வீட்டை விட்டு வெளிய வா.. ஹே விஜய் பனையூர் விட்டு வெளிய வா” எனக் கூறுபவர்களுக்கு, எனது வீடு தமிழ்நாடு தான் என சேலம் மாவட்டத்தில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் விஜய் பதிலளித்துள்ளார்.
Published on
Summary

சேலத்தில் நடைபெற்ற தவெகவின் நிர்வாகிகள் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலளித்த விஜய், தமிழ்நாடு தான் தனது வீடு எனக் கூறினார். அவர், 'என் வீட்டில் 8 கோடிபேர் இருக்கிறார்கள்' எனத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டு மக்களுடன் இணைந்து இருப்பேன் என உறுதியளித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெகவின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம், சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடைபெற்றது. காவல்துறை தரப்பில் இருந்து, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை இக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், இக்கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், உடல்நலம் சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் 12.30 மணியளவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

விஜய்
விஜய்x

ஏற்கனவே, சட்டபேரவைத் தேர்தலையொட்டி ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக தவெக தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டிருந்தும் எந்தக் கட்சிகளும் இதுவரை தவெகவுடன் கூட்டணி வைக்கவில்லை. அதேசமயம், ஜனநாயகன் பட விவகாரம், கரூர் உயிரிழப்புச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை ஆகியவற்றினால் விஜய் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனம் எழுந்து வந்தது. மேலும், விஜய் அதிகப்படியான மக்கள் சந்திப்பு நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. பனையூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்திலேயே இருக்கிறார் என்ற விமர்சனங்களும் எதிர்க்கட்சிகளால் விஜய் மீது வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கரூர் சம்பவத்தின் போது, விஜய் 1 மாத காலத்திற்கு பொது வெளிகளில் வராமல் இருந்தது இந்த விமர்சனங்கள் மேலும் அதிகரிக்க வழிவகுத்தது.

சேலம் கூட்டத்தில் விஜய்
”ஒரு சதவீதம் ஓட்டு வாங்க தில், திராணி இருக்கிறதா?” - எதிர்க்கட்சிகளுக்கு சவால்விட்ட விஜய்!

இந்த நிலையில் தான் இன்று சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தவெகவின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசியிருக்கும் தவெக தலைவர் விஜய் ”வீட்டிலேயே இருக்கிறார்” என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்குப் பதிலளித்துப் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “ஹே விஜய் வீட்டைவிட்டு வெளிய வா.. பனையூரை விட்டு வெளிய வா என்பவர்களுக்கு என் வீடு எங்கிருக்கிறது என்பது தெரியுமா? இந்த தமிழ்நாடு என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் மாநிலமாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை என் தாய்நாடான தமிழ்நாடுதான் என் வீடு. என் வீட்டில் 8 கோடிபேர் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் என் வீட்டு மக்கள். என் குடும்பம்; என் உறவு; என் சொந்தம். எனக்கு எல்லாமும் கொடுத்த இந்த சொந்தங்களுக்கு எல்லாமுமாக உடன் இருக்கப்போவது இந்த விஜய் மட்டும்தான்” எனப் பதிலளித்துள்ளார்.

சேலம் கூட்டத்தில் விஜய்
சேலம்| விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு.. மரணித்தவர் விவரம் வெளியீடு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com