இடைக்கால பட்ஜெட்| வேளாண் துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு! முழு விவரம்
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பொதுப் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில், வேளாண் பட்ஜெட்டை துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
வேளாண் துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு!
இயற்கை வேளாண் மையம் மூலம் விவசாயிகளுக்கு நெல் வகைகள் வழங்கப்பட்டுள்ளது. 58 ஆயிரம் தரிசு நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு வேளாண் நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. மன்ணுயிர் காப்போம் திட்டம் 142 கோடிரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கோவையில் நம்மாழவர் இயற்கை வேளாண் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 900 மெட்ரிக் டன் நெல் வகைகள் சேகரிக்கப்பட்டு 70 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் சார்பில் 12 லட்சத்து 84 ஆயிரம் விவசாயிகளுக்கு 178 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
பயிர் சேதங்களுக்கு ரூ.20,000 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பயிர் சேத நிவாரணத்தால் 25.36 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு 70% மானியம் வழங்கப்பட்டுள்ளது. 15 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளில் இதுவரை 83,64 விவசாயிகளுக்கு ரூபாய் 69 ஆயிரத்து 457 கோடி பயிர் கடனும், 16 லட்சத்து 9 ஆயிரம் நபர்களுக்கு ரூபாய் 8938 கோடி கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைக்கான கடனும் வழங்கப்பட்டுள்ளது.
வெள்ள காலங்களில் ஒரு நெல் மணி கூட வீணாக கூடாது என்ற அடிப்படையில் 495 கோடி நிதியில் 3 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 120 நவீன சேமிப்பு தடங்கலங்களுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெண்கள் மற்ற கைம்பெண்கள் வருமானத்தை ஈட்டுவதற்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் செம்மறியாடுகள் 38,800 பயனாளிகளுக்கு ரூபாய் 75 கோடியே 63 லட்சம் செலவில் வழங்கப்பட்டுள்ளன.
டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடி திட்டத்துக்கு ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 3,435 சிப்பம் கட்டும் அறைகள், 8,218 மெட்ரின் டன் கொண்ட 5 குளிர்பதன கிடங்குகள் அமைப்பு. உணவு பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் மூலம் 5,000 மெட்ரிக் டன் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிட விவசாயிகளுக்கு ரூ.62 கோடியில் திட்டங்கள் மூலம் 17,035 பேர் பயன்பெற்றுள்ளனர். மேலும் 24 லட்சம் ஏக்கரில் ரூ.174 கோடியில் பயறு பெருக்குத் திட்டம் செயல்பட்டுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான பம்புசெட்டுகளுக்கு மானியம் ரூ.7.50 கோடி வழங்கப்பட்டுள்ளது. வேளாண் செயல்பாட்டுக்காக ரூ.3,002 கோடி வட்டி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு மீன் உற்பத்தி 1.75 லட்சம் டன்னில் இருந்து 2.67 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
மொத்தமாக 2026-27 நிதியாண்டு வேளாண் துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ. 69,457 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது” என பேசினார்.
பட்ஜெட் மீதான விவாதம் எப்போது??
தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம், வரும் இருபதாம் தேதி வரை நடைபெறும் எனவும், வரும் 20 தேதி தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதி துறை அமைச்சர் தங்கம் தன்னரசு பதில் அளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

