“முதல்முறை வாக்காளர்களும் இத்திருவிழாவில் பங்கேற்க வேண்டும்”- வாக்கு செலுத்தியபின் ஆளுநர் ரவி

“ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இத்தேர்தல். நான் இதில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. இந்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் இந்த திருவிழாவில் பங்கேற்க வேண்டும்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை வேளச்சேரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய தலைமுறை

செய்தியாளர்: சுகன்யா மெர்ஸி பாய்

பீகாரில் இருந்த தனது வாக்கை தென் சென்னை தொகுதிக்கு மாற்றியுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்நிலையில், கிண்டி வேளச்சேரி சாலையில் உள்ள அட்வெண்ட் கிறிஸ்தவ நடுநிலைப் பள்ளியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் இன்று வாக்களித்தனர்.

சென்னை வேளச்சேரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை வேளச்சேரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இங்கு நடப்பது ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா. நான் இதில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. இந்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும், குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
மக்களவை தேர்தல் 2024 | வாக்களிப்பதற்காக ரஷ்யாவில் இருந்து வந்த விஜய்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com