தமிழ்நாடு அரசின் விருதுகள்புதிய தலைமுறை
தமிழ்நாடு
2024 ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் விருதுக்கு தேர்வானவர்கள் யார் யார்?
தமிழக அரசின் திருவள்ளுவர், அண்ணா, காமராசர், பாரதியார் மற்றும் பாரதிதாசன் விருதுகளுக்கு தேர்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
’எங்கிருந்து எங்கேயோ போச்சு’ இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியல்.. ஷாக் கொடுத்த சென்னையின் இடம்!
2023ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரசிவத்துக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது பலராமனுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழநிபாரதிக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'நான் உன்ன பெத்ததே சந்தோஷம்' இறந்த மகளுக்காக விருதை பெற்ற தந்தை..கண்ணீரில் மூழ்கிய விருது விழா | PTD
இதேபோல் பாவேந்தர் பாரதிதாசன் விருது எழுச்சிக் கவிஞர் முத்தரசுக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது ஜெயசீல ஸ்டீபனுக்கும், முத்தமிழ் காவலர் விசுவநாதம் விருது முனைவர் இரா. கருணாநிதிக்கும் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்பட உள்ளது.