'நான் உன்ன பெத்ததே சந்தோஷம்' இறந்த மகளுக்காக விருதை பெற்ற தந்தை..கண்ணீரில் மூழ்கிய விருது விழா | PTD

“ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு.. பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு..” என்ற வரிகளுக்கேற்ப, தனது சாதனை மகள் மண்ணுலகைவிட்டுச் சென்ற நிலையில், அவளின் சாதனைக்கான விருதைப் பெற்று உச்சிமுகர்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டுள்ளார் தந்தை ஒருவர்..
savita kanswal father
savita kanswal fatherPT

விருதைப் பெற்ற இவரது காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. சிறுவயது முதலே சாதிக்கத்துடித்து, சாதித்தும் காட்டி விண்ணோடு கலந்த அந்த சாதனைப் பெண்தான் சவிதா கன்ஸ்வால்.. யார் இவர்? முழு விவரத்தை பார்க்கலாம்.

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசியைச் சேர்ந்த லோந்த்ரு எனும் கிராமத்தில் பிறந்தவர் சவிதா. தான் 11ம் வகுப்பு படித்தபோது, 10 நாள் கொண்ட சாகச பயிற்சி திட்டத்தில் பங்கேற்ற இவருக்கு, பிற்காலத்தில் சாகச நாயகியாகவே மாற வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. அதன்படி, நேரு கல்வி நிலையத்தில் சேர்ந்த இவர், 2016ம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார். தனது படிப்பு குறித்து முன்னதாக பேசிய அவர், படிப்பதற்கு போதிய அளவு பணம் இல்லாததால் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து படித்தேன். மௌண்ட் எவரஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்பதே என் கனவு என்று கூறியுள்ளார். அப்படி, தான் ஆசைப்பட்டபடி, அடுத்தடுத்த காலங்களில் மௌண்ட் எவரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு மலைகளில் ஏறி சாதித்தார் சவிதா.

savita kanswal father
முரசொலி நிலம் வழக்கு - “தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்திற்கு முழு அதிகாரம்” - சென்னை உயர்நீதிமன்றம்

கடந்த 2022ம் ஆண்டு, மௌண்ட் எவரஸ்ட் மற்றும் மாகலு மலை இரண்டிலும் 16 நாட்களுக்குள் ஏறி சாதித்தார் சவிதா. இதனால், இந்தியாவில் இத்தகைய சாதனையை புரிந்தி முதல் சிங்கப்பெண்ணாகவும் மாறினார். சாதனை படைத்த அவர், தனது அணியினருடன் சேர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் உத்தரகாசி மலையில் கயிறு கட்டும் பணியில் ஈடுபட்டபோது, பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். பல மலைகளின் உச்சியில் கால் பதித்த அவர், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி கடைசி மூச்சை சுவாசித்திருந்தார். சாதனை மகளின் இழப்பை அறிந்த குடும்பமே கண்ணீர் கடலில் மூழ்கிய நிலையில், சாதனை மங்கையின் சாதனையை அங்கீகரித்து அவருக்கு 2022ம் ஆண்டுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது அறிவிக்கப்பட்டது.

அர்ஜுனா விருது உள்ளிட்ட விருதுகள் நேற்று வழங்கப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து தனது மகள் சவிதா சார்பில் சாதனைக்கான விருதை, தந்தை ராதே ஷ்யாம் கன்ஸ்வால் பெற்றுக்கொண்டார். சவிதா குறித்த அறிவிப்பு வெளியானபோது, ஒட்டுமொத்த குடும்பமும் மகளை நினைத்து உணர்சிப்பெருக்க கண்ணீர் வடித்தது. அப்போது அரங்கத்தில் இருந்த சிலரும் கண்ணீர் வடித்தனர். ”இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே.. கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே” என்ற வரிகளுக்கேற்ப உணர்ச்சிப்பெருக்க விருதைப் பெற்ற தந்தையின் வீடியோ வைரலாகியுள்ளது. பலரும் சவிதாவின் சாதனையை நினைவுகூர்ந்து பாராட்டி வருகின்றனர்.

savita kanswal father
தென்கொரிய BTS குழுவினரை காண 10,000 ரூபாயோடு வீட்டைவிட்டு வெளியேறிய 3 கரூர் சிறுமிகள்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com