\
Tamil Nadu Drought Worsens, Hay Shortage Pushes Feed Prices Up
கால்நடைகள்AI

வறட்சியால் வாடும் மாவட்டங்கள்.. தீவன விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துமா தமிழக அரசு?

தமிழகத்தில் போதிய மழை இல்லாததால், ஒரு சில மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது. ஒருபுறம் நெல் சாகுபடி பொய்த்துப் போய் கால்நடைகளுக்கு பிரதான உணவான வைக்கோல் தட்டுப்பாடு உருவாகியுள்ள நிலையில், மறுபுறம் தீவனங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன.
Published on: 

கடும் வறட்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கால்நடைத் தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த ஆண்டு நெல் சாகுபடி குறைந்து, வைக்கோல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு வைக்கோல் கட்டு, தற்போது 200 ரூபாயைத் தாண்டி விற்பனையாகிறது. இதனால் கால்நடைகளைப் பராமரிப்பதே கேள்விக்குறியாகியுள்ளதாக சொல்கிறார்கள் விவசாயிகள்.

விவசாயம்
விவசாயம்ANI

இதேபோல், நெற்களஞ்சியமான தஞ்சையில் பால் உற்பத்தியாளர்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர். வைக்கோல் ஒரு கட்டு 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலும், தவிடு ஒரு மூட்டை 1,475 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. புண்ணாக்கு விலையும் அதிகரித்துள்ளது. அடர்தீவனம் ஒரு மூட்டை 1,750 ரூபாயிலிருந்து 2,100 ரூபாயாக உயர்ந்துள்ளதால், கால்நடை வளர்ப்பே சிரமமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

மதுரையில் கால்நடைகளுக்கான தவிடு விலை தொடர்ந்து அதிகரித்து வருவது கால்நடை வளர்ப்போரை நெருக்கடியில் தள்ளியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை தவிடு 650 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது அது 870 ரூபாய்க்கு விற்கப்படுகிறது .

Tamil Nadu Drought Worsens, Hay Shortage Pushes Feed Prices Up
2 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நாமக்கல்லில் ஒரு கட்டு வைக்கோல் விலை 350 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 70 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை அடர்தீவனம் 1,700 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பகுதி மீண்டும் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகிறது. இதனால் பல விவசாயிகள் கால்நடைகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கால்நடைகள்
கால்நடைகள்AI

தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் நீடிக்கும் இந்த சூழலை விளக்கி அரசு எடுத்து வரும் நடவடிக்கை பற்றி விளக்கம் கோரினோம். வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்படாமல் இருக்க, மாட்டுத்தீவனம் வாங்குவதற்காக 10 கோடி ரூபாய் மாநில அரசு ஒதுக்கியுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இந்த நிதி மூலம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் மாட்டுத்தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர். அத்துடன் தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, மாவட்டந்தோறும் தீவன முகாம்களை அமைப்பதோடு, வறட்சி நிவாரண உதவிகளையும் அறிவிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு…

Tamil Nadu Drought Worsens, Hay Shortage Pushes Feed Prices Up
'வெற்றிப் பயணம்’ திட்டம் நாளை தொடக்கம்.. எந்தெந்தப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com