”தை மகளை வரவேற்போம்.. மதச்சார்பற்ற சமத்துவப் பெருநாள்” - முக ஸ்டாலின் வாழ்த்து
பொங்கல் பண்டிகை வருகின்ற 14-ம் தேதி முதல் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் என கொண்டாடப்படவிருக்கிறது.
இந்த பண்டிகையை கொண்டாடும் வகையில் பொதுமக்கள் அனைவரும் அவரவருடைய சொந்த ஊருக்கு திரும்பிவரும் நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகை வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்த முக ஸ்டாலின்..
தமிழக மக்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்திருக்கும் முக ஸ்டாலின், தை மகளை வரவேற்போம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “பொங்கல் தமிழரின் தனிப்பெரும் திருநாள்! நம் பண்பாட்டுப் படைக்கலன்! உழைப்பையும் உழவையும் இயற்கையையும் போற்றும் மதச்சார்பற்ற சமத்துவப் பெருநாள்!
#Pongal2025-ஐ மாநிலமெங்கும் உடன்பிறப்புகள் கலை, விளையாட்டு நிகழ்வுகளுடன் ஏற்றத்துடன் கொண்டாடிடுவீர்!” என எழுதியுள்ளார்.