\
Tamil Actors Strengthen Fan Clubs Amid Vijay’s Political Rise
கோப்புபடம்X

முதலமைச்சர் விஜய் வழியில்.? நடிகர்களின் அரசியல் வியூகமும், ரசிகர் படைகளும்!!

சிலரோ, சினிமாவில் விஜய் இடத்தைப் பிடிக்கும் ஆசையோடு, தங்களது ரசிகர் மன்றங்களை பலப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Published on: 

விஜய் முதல்வரானதைப் பார்த்து மேலும் சில நடிகர்களுக்கு அரசியல் ஆர்வம் வந்திருப்பதாக பேச்சு எழுந்துள்ளது. சிலரோ, சினிமாவில் விஜய் இடத்தைப் பிடிக்கும் ஆசையோடு, தங்களது ரசிகர் மன்றங்களை பலப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் தனுஷ் ரசிகர் மன்றத்துக்கென பிரத்யேகமாக புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொகுதி வாரியாக ரசிகர் மன்றங்களை அமைக்கவும், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைக்கப்பட்டு, இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

Cm vijay
Cm vijayPTI

இன்னொரு பக்கம், சமீபத்தில் சிவகார்த்திகேயனின் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு, சென்னை பரணிபுத்தூரில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழகம் முழுவதும் இருந்து ஒரே சீருடையான வெள்ளைச் சட்டையுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டனர். அப்போது நற்பணி இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்த முக்கிய ஆலோசனைகளும் இதில் வழங்கப்பட்டன.

Tamil Actors Strengthen Fan Clubs Amid Vijay’s Political Rise
வடக்கு வாசல் - 5 | இமாச்சலை இறுக்கும் நிதி நெருக்கடி.. தள்ளாடும் காங்கிரஸ்.. தலைநிமிரும் பாஜக!

இதேபோல், சூர்யா சமீபத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சமூக வலைதள விமர்சனங்களுக்குப் பதிலளித்து ஆற்றலை வீணடிக்காமல், "அன்பை மட்டும் விதைப்போம்" என்றும், குடும்பத்தைக் கவனிக்கவும் அவர் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியது பலரையும் கவனிக்க வைத்தது.

விஜய் சேதுபதியும் தனது இயக்கத்தை நிர்வாகரீதியாக பலப்படுத்தும் நோக்கில், புதிய தலைமை ஒருங்கிணைப்பாளரை நியமித்து உத்தரவிட்டுள்ளார். ரவி மோகன், சூரி போன்ற நடிகர்களின் ரசிகர் மன்றச் சந்திப்புகளும் கூடுதல் கவனம் பெற்றுள்ளன.

Tamil Actors Strengthen Fan Clubs Amid Vijay’s Political Rise
நிறம் மாறும் சினிமா - 11 | திராவிட சினிமாக்கள் : சாதனைகள், பிரச்னைகள், தாக்கங்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com