தமிழ்நாடு
கும்பகோணம்: தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம் என்பதை நிரூபிக்கும் வகையில் கும்பகோணத்தில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கும்பகோணம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கிற்கு வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் எரிபொருள் நிரப்பச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்ததனர்.
இதுதொடர்பாக அங்கிருந்த ஊழியர்களிடம் கேள்வியையும் எழுப்பினர். தகவல் அறிந்து வந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க்-ஐ முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கலப்பட பெட்ரோலால் வண்டி பழுதாகிவிட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்
இந்நிலையில் இதுதொடர்பான காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.