Heavy rain in Gujaratpt desk
இந்தியா
கனமழையால் முடங்கிய குஜராத் மாநிலம்...
குஜராத் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கன மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் மேலும் 2-3 தினங்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், தாழ்வான இடங்களில் வசிப்போரை பத்திரமான இடத்திற்கு அப்புறப்படுத்த மாநில முதலமைச்சர் பூபேந்திர பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.
heavy Rainpt desk
கனமழையால் தெற்கு குஜராத்தில் உள்ள வல்சட், தபி, நவ்ஸரி, சூரத், நர்மதா, பஞ்சமஹாத் போன்ற பகுதிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் சர்தார் சரோவர் நர்மதா அணையின் நீர்மட்டம் 135.30 மீட்டராக உயர்ந்துள்ளது. நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருவதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது. தாழ்வான இடங்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால், பாதிக்கப்பட்ட மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.