தீப்பற்றி எரிந்த ஆட்டோ pt desk
தமிழ்நாடு
சென்னை: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
ஆவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு - தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள் எலும்புக் கூடான ஆட்டோ.
செய்தியாளர்: நவீன் குமார்
சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்மோகன். ஆட்டோ ஓட்டுனரான இவர், நேற்று மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே உள்ள காலி மைதானத்தில் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். அப்பொழுது ஆட்டோ திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கிது.
தீப்பற்றி எரிந்த ஆட்டோpt desk
இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆவடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் ஆட்டோ முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து ஆவடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ திடீரென ஏற்பட்ட தீப்பற்றி எரிந்து நாசமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது