\
மருமகன் உட்பட இருவர் கைது
மருமகன் உட்பட இருவர் கைதுpt desk

வேலூர்: மாமனார் வீட்டில் 57 சவரன் நகைகள் திருட்டு - மருமகன் உட்பட இருவர் கைது

வேலூர் அருகே மாமனார் வீட்டில் 57 சவரன் நகைகளை திருட்டியதாக மருமகன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
Published on

செய்தியாளர்: குமரவேல்

வேலூர் பாகாயம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சாலமன் (67). இவரது மனைவி உயிரிழந்த நிலையில், இவரோடு அவரது மகள் ராதிகா - மருமகன் சாம் ஜெபதுரை ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சாலமனும், ராதிகாவும் சென்னையில் நடைபெற்ற திருமணத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர்.

Arrested
Arrestedpt desk

அப்போது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு 57 சவரன் தங்க நகைகள் திருடு போயுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாகாயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மருமகன் சாம் ஜெபதுரை, தனது கூட்டாளி உசேன் என்பவனுடன் சேர்ந்து மாமனாரது வீட்டில் இருந்த நகைகளை திருடியது தெரியவந்தது.

மருமகன் உட்பட இருவர் கைது
மதுரை: மக்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்!

இதனை அடுத்து தனிப்படை காவல்துறையினர், தலைமறைவாக இருந்த மருமகன் சாம் ஜெபதுரை, அவரது கூட்டாளி உசேன் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 57 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களை வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com