விதவை மறுமணத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: ம.பி. முதலமைச்சர் அறிவிப்பு

விதவை மறுமணத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: ம.பி. முதலமைச்சர் அறிவிப்பு

விதவை மறுமணத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: ம.பி. முதலமைச்சர் அறிவிப்பு
Published on

விதவை மறுமணத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

‘தில் செ’ என்ற வானொலி நிகழ்ச்சியில் பேசிய போது சிவராஜ் சிங் சவுகான் இந்த அறிவிப்பை கூறினார். அந்த நிகழ்ச்சியில் பெண்களின் முன்னேற்றத்திற்காக தமது அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் மக்களிடம் விளக்கி கூறினார்.

குழந்தை திருமணம் மற்றும் வரதட்சணை கொடுமை ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவர அரசுக்கு மக்கள் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பெண்களுக்கு பொருளாதார மற்றும் சமூக ரீதியாக அதிகாரம் அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். அதேபோல், “மாநில காவல்துறை சேவையில் சேர விரும்பும் பெண்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டம் இயற்றப்படும். சிசிடிவி கேமரா பொருத்தப்படும் பேருந்துகளுக்கு மட்டும் உரிமம் வழங்கப்படும்” என்று சவுகான் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com