உக்ரைனில் இருந்து திருவாரூர் திரும்பிய மாணவி: முன்னாள் அமைச்சர் காமராஜ் நேரில் சந்திப்பு

உக்ரைனில் இருந்து திருவாரூர் திரும்பிய மாணவி: முன்னாள் அமைச்சர் காமராஜ் நேரில் சந்திப்பு
உக்ரைனில் இருந்து திருவாரூர் திரும்பிய மாணவி: முன்னாள் அமைச்சர் காமராஜ் நேரில் சந்திப்பு

உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்று போரினால் பாதிக்கப்பட்டு திருவாரூர் திரும்பிய மாணவி அபிராமியை முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள விஷ்ணுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அபிராமி. இவர் உக்ரைனில் கார் க்யூ பகுதியில் அமைந்துள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் ரஷ்யா-உக்ரைன் போர் ஆரம்பித்து தமிழக மாணவர்கள் உட்பட பல இந்தியர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்தார்கள். தற்போது இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து அங்குள்ள இந்தியர்களை மீட்டு வருகிறது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபிராமி தற்போது தம் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். அவரை நேரில் சந்தித்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆறுதல் கூறினார். அப்போது மாணவி அபிராமி, இங்கே மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதன் அடிப்படையில் அது குறித்து அரசுக்கு உரிய அழுத்தம் கொடுப்பதாக காமராஜ் தெரிவித்தார். மேலும் உக்ரைன் நாட்டில் உள்ள நிலவரம் குறித்தும் அங்கு சிக்கியுள்ள மற்ற மாணவர்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com