முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்Pt web

”இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி” - முதல்வர் ஸ்டாலின்.!

இஸ்லாமியர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி துரோகங்களை புரிந்துள்ளார் என இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Published on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் மாநாடு, பொதுக்கூட்டம், மக்கள் சந்திப்பு என தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மஹல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு இன்று, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். மேலும், அமைச்சர்கள் கே.என் நேரு அன்பில் மகேஷ், கோவி செழியன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநாடு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநாடுPt web

தொடர்ந்து, இஸ்லாமியரின் அடக்க ஸ்தலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க மாவட்டந்தோறும் அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும். நீண்ட காலமாக எந்த வித விசாரணையும் இன்றி சிறையில் வாடும் இஸ்லாமியர்களுக்கு விடுதலை வேண்டும். இன்று தண்டனை முடிந்தும் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது பிணையில் விடுவிக்க வேண்டும் மற்றும் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி வாசித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
அரசியலில் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை.. விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

இதையடுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகீதின் பேசுகையில், “தமிழகத்தில் மஜித், பள்ளிவாசல் 8 ஆயிரம் உள்ளன. தமிழக அரசு அறிஞர்களை பாராட்டி, வாழ்த்த கூடிய பாரம்பரியமான பண்பாட்டை மேற்கொண்டு உள்ளது. இந்த முறையை இஸ்லாமிய சமூகத்திலும் பரப்ப வேண்டும் என்ற உணர்வோடு, ஏழு அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கியுள்ளோம். இஸ்லாமிய சமூகம் திராவிட மாடல் ஆட்சிக்கு உறுதுணையாக வந்துக்கொண்டு இருப்பதை முதல்வருக்கு காட்ட வேண்டி தான் மாநாட்டை கூட்டினோம். எனக்கு வாழ்த்து பாட தான் தெரியும், வசைப்பாட தெரியாது. தந்தை கருணாநிதி என்றாலும், அவரது வழியில் வந்த தனயன் ஸ்டாலின் என்றாலும், புதிய சூரியனாக வெளிவந்துக்கொண்டு இருக்கும் உதயநிதியாக இருந்தாலும், இஸ்லாமிய சமுதாயத்தை மிக ஆழமாக தெரிந்து, புரிந்து கேட்பதை எல்லாம் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகீதின்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகீதின்Pt web

காயிதேமில்த்திற்கு நுாற்றாண்டு நுாலகம் நாங்கள் கேட்காமல் அமைத்துள்ளீர்கள். இஸ்லாமியர்கள் மனதில் வைத்துக்கொண்டு இருந்தாலும், தயங்கி கொண்டு கேட்டாலும், கேட்பதையும், கேட்க நினைப்பதையும், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு செய்பவர் தான் முதல்வர் ஸ்டாலின். இது தான் திராவிட மாடல் ஆட்சியின் பாரம்பரிய முறை. இந்த திராவிட ஆட்சி நீடிக்க வேண்டும். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் முதல்வர் ஸ்டாலின் போல எங்களுக்கு முதல்வர் வேண்டும் என்கிறார்கள். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கூட முதல்வர் ஸ்டாலின் போன்றவர் போல எங்களுக்கும் முதல்வர் வேண்டும் என காது குளிர கேட்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொடர் முரண்.. முக்கியத்துவம் பெற்ற ராகுல் - கனிமொழி சந்திப்பு!

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ” இஸ்லாமியர்களின் அன்புதான் எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தை, உற்சாகத்தை அளிக்கிறது. 1967ஆம் ஆண்டு தேர்தலில் அண்ணாவுக்கு தோள்கொடுத்தவர் காயிதே மில்லத் இஸ்லாமியர்களின் நலனுக்கு திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு தந்தது திமுக; காயிதே மில்லத் பெயரில் கல்லூரி தந்தவர் கலைஞர் கருணாநிதி.

மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்
மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்Pt web

இந்தியாவிலேயே இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். அதற்கு காரணம் திமுக தான். இஸ்லாமியர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி துரோகங்களை புரிந்துள்ளார். பழனிசாமிக்கு தெரிந்ததெல்லாம் காலில் விழுவது; காலை வாருவது மட்டும்தான். 2019-ல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக போராடியது; அதிமுக ஆதரித்ததால் அது சட்டமானது. 2020-ல் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் மக்கள் வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், அப்போது கூட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு போராட்டம் நடத்தியவர்களை தடியடி நடத்தி கலைத்தது. இப்படியெல்லாம் துரோகம் செய்த பழனிசாமி கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு அத்திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தோம் என்கிறார். எனவே, தமிழ்நாட்டு நலனுக்கு எதிரான தேசிய ஜனநாயகக் கூட்டணியை தடுக்கக் கூடிய திறமை திமுகவுக்கு மட்டுமே உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
அரசியல் மாற்றம் ஏன் கொள்கையிலிருந்து அல்ல, உணர்ச்சியிலிருந்து தொடங்குகிறது..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com