ராகுல் - கனிமொழி சந்திப்பு
ராகுல் - கனிமொழி சந்திப்புpt web

திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொடர் முரண்.. முக்கியத்துவம் பெற்ற ராகுல் - கனிமொழி சந்திப்பு!

காங்கிரஸ் - திமுக நிர்வாகிகள் இடையே வார்த்தை மோதல் நிலவி வரும் நிலையில், கனிமொழி ராகுல்காந்தியை சந்தித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
Published on

தமிழக சட்டப்பேரவை நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இதற்கு, திமுக தரப்பிலிருந்து மறுப்பு தெரிவித்தாலும், காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடர்ந்து, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது.

மாணிக்கம் தாகூர், செல்வப் பெருந்தகை
மாணிக்கம் தாகூர், செல்வப் பெருந்தகைpt web

இந்த நிலையில் தான், 'பூத் கமிட்டிக்குக் கூட ஆள் இல்லாத காங்கிரஸ், ஆட்சியில் பங்கு கேட்பதா?' என்று திமுக எம்.எல்,ஏ கோ.தளபதி கூறியது, தமிழக காங்கிரஸ் மட்டுமின்றி டெல்லி தலைமையிலும் சூட்டை கிளப்பியிருந்தது. இதற்குப் பதிலடியாக, 'கோ.தளபதி மீது நடவடிக்கை எடுங்கள்' என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை திமுக தலைமையை வலியுறுத்திய நிலையில், 'மதுரை வடக்கில் இந்த முறை கை சின்னம் தான்' என்று அக்கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் சவால் விடுத்தார். இந்த சூழலில், இந்த 'நீறுபூத்த நெருப்பை' அணைப்பதற்கான முயற்சியாகவே ராகுல்காந்தி கனிமொழி சந்திப்பு பார்க்கப்பட்டது.

ராகுல் - கனிமொழி சந்திப்பு
அதிமுக-பாஜக கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வம்..? எடப்பாடி பழனிசாமி பச்சைக்கொடி!

இந்த நிலையில் தான், திமுக எம்.பி கனிமொழி இன்று, டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துப் பேசியிருக்கிறார். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில், தொகுதிப் பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தையும் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

எம்.பி கனிமொழி
எம்.பி கனிமொழிPt Web

முன்னதாக, 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் '38 தொகுதிகள்' அடங்கிய பட்டியலை தயாரித்து வைத்திருக்கும் நிலையில், 25 தொகுதிகளுக்குள் சுருக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து, 2021இல் 25 இடங்களை வாங்கிய காங்கிரஸ், இந்த முறை தவெக 75 இடங்களைத் தரத் தயாராக உள்ளதாகக் கூறி, திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது.

ராகுல் - கனிமொழி சந்திப்பு
அஜித் பவார் உயிரிழப்பு |விமான விபத்து புலனாய்வு அமைப்பு விரைவு.. கருப்புப் பெட்டியை மீட்கத் திட்டம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com