\
Northeast Monsoon: Less Rain in North Tamil Nadu, More in South
மழைப்பொழிவுPt web

தமிழ்நாட்டில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை!! மழைப் பொழிவு எப்படி இருக்கும்?

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் வட மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், தென் தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், கடலோர மாவட்டங்களில் இயல்பாகவும் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on: 

உலகளவில் நிலவிவரும் எல்நினோ தாக்கம் காரணமாக, இந்தியாவில் வழக்கமான அளவைவிட குறைவான மழையையே தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இதனால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக கடுமையான விலையேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், சாமானிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்தச்சூழலில் தான், தமிழகத்திற்கு அதிக அளவிலான மழையைக் கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ள சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர். துரை இந்தப் பருவமழைக் காலம் தமிழ்நாட்டில் எப்படி இருக்கும் என்பது குறித்துப் பேசியுள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையம்ANI

தென்மேற்கு பருவமழை குறைவு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர். துரை பேசுகையில், ”2026 ஆம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அக்டோபர் 15ஆம் தேதி அன்று முழுமையாக விலகியுள்ளது. கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை 20% குறைவாகப் பதிவாகியுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் இயல்பான அளவிற்கு மழைப் பொழிவு பதிவாகியிருந்தாலும், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவே மழை பதிவாகியுள்ளது. முன்னதாக 2002 ஆம் ஆண்டில் 45 சதவீதமும், 2016 ஆம் ஆண்டில் 16 சதவீதமும் தென்மேற்கு பருவமழை குறைவாகப் பதிவாகியிருந்தது” என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் கரூர் தோகைமலையில் 11 செ.மீ அளவில் கனமழை பதிவாகியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். பொதுவாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 45 சென்டிமீட்டர் மழை இயல்பாகப் பதிவாகும். இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் வட மாவட்டங்களின் உள்பகுதிகளில் இயல்பை விடக் குறைவாகப் பதிவாக வாய்ப்புள்ளது. தென் தமிழகப் பகுதிகளில் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்Pt web

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாகப் பதிவாகும். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மழை இயல்பான அளவில் பதிவாக வாய்ப்புள்ளது. காரைக்கால், கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை எப்படி பதிவாகும் என்பதை உறுதியாகக் கணிக்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Northeast Monsoon: Less Rain in North Tamil Nadu, More in South
தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. சென்னை உள்பட 15 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com