\
Stalin Questions CM’s Role Beyond Convoys and Attire
ஸ்டாலின் - விஜய்Pt web

வேட்டைக்காடாக தமிழ்நாடு; கோட்சூட் போடுவது மட்டும் முதல்வர் பணியல்ல - மு.க. ஸ்டாலின் விமர்சனம்

கோட் சூட், பட்டு வேட்டி, சட்டை அணிவதும் கான்வாயில் வந்து செல்வதும் மட்டுமே முதல்வர் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார்? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Published on: 

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற தவெக, மே 10-ம் தேதி ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், தவெக ஆட்சி அமைக்கப்பட்டு 6 மாதத்தை நெருங்கியிருக்கிறது. எனினும், முதல்வர் விஜய் தலைமையிலான இந்த ஆட்சியில், சட்டம் ஒழுங்கு குறித்து திமுக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றன.

ஸ்டாலின்
ஸ்டாலின்Pt web

அந்தவகையில் தான், தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவு குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். 'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.

கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் விஜய்? முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, 6 மாத தவெக ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை. தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும். கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Stalin Questions CM’s Role Beyond Convoys and Attire
பொளந்து எடுக்கும் கனமழை.. வானிலை ரேடார் திடீர் Shut Down.. சென்னையில் பேரதிர்ச்சி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com