தீபத் திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தாம்பரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. தாம்பரத்தில் இருந்து நாளை, நாளை மறுநாள் காலை 8.40 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. மதியம் 12.35 க்கு சிறப்பு ரயில் திருவண்ணாமலை சென்றடையும். 

மறுமார்க்கமாகவும், நாளையும், நாளை மறுநாளும் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 1.45க்கு புறப்படும் சிறப்பு
ரயில் மாலை 5.15க்கு தாம்பரத்தை வந்தடையும்.  
இது மட்டுமின்றி, சென்னை கடற்கரையில் இருந்து நவம்பர் 26, 27ஆம் தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வேலூர் கண்டோன்மெண்ட் வழியாக நள்ளிரவு 12.05க்கு திருவண்ணாமலையை சென்றடையும். 

சிறப்பு ரயில்கள் இயக்கம்
‘இந்த ஒருநாள் மட்டும் 5 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம்’ - சென்னை மெட்ரோ! பின்னணி என்ன?

திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.45க்கு புறப்படும் சிறப்பு ரயில் வேலூர் வழியாக காலை 9 மணிக்கு சென்னை வந்தடையும்.  இந்த சிறப்பு ரயில்களை தீப திருவிழாவுக்கு செல்லும் பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com