metro railpt desk
தமிழ்நாடு
‘இந்த ஒருநாள் மட்டும் 5 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம்’ - சென்னை மெட்ரோ! பின்னணி என்ன?
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளையொட்டி டிசம்பர் 3ஆம் தேதி மெட்ரோ ரயில்களில் வெறும் 5 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற டிசம்பர் 3ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று, க்யூஆர் பயணச்சீட்டுகளில், ஒற்றை பயண இ-க்யூஆர் பயணச்சீட்டுகளை வாங்கும் பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெறும் 5 ரூபாய் என்ற பிரத்யேக கட்டண சலுகையை வழங்குகிறது.
metro railpt desk
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள தினத்தை நினைவு கூறும் வகையிலும், பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச் சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த கட்டண சலுகை வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இது, இ-க்யூ.ஆர் பயணச் சீட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இந்த 5 ரூபாய் கட்டண சலுகை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.