சிறப்பு பேருந்துகள்
சிறப்பு பேருந்துகள்கோப்புப்படம்

எல்லோரும் கிளம்பியாச்சா? தயார் நிலையில் சிறப்பு பேருந்துகள்! சென்னைக்கு மட்டும் இத்தனை பேருந்துகளா?

தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்புபவர்களின் வசதிக்காக இன்று முதல் தமிழகம் முழுவதும் 12,846 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தின் முக்கிய ஊர்களில் இருந்து இன்று மட்டும் சென்னைக்கு 2,692 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
Published on

சென்னைக்கு திரும்பி வருவதற்கு மட்டும் 1,50,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னைக்கு பேருந்துகளில் வருபவர்கள் செங்கல்பட்டு - கிளாம்பாக்கம் இடையே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க ரயில்வேயும் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

4ம் தேதி அதாவது வரும் திங்கள் கிழமை அதிகாலை காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு 4 சிறப்பு மின்சார புறநகர் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள்
ஈரோடு: ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை தாக்கியதாக இருவர் கைது

பயணிகள் பேருந்திலிருந்து ரயிலுக்கு எளிதில் ஏற வசதியாக தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பொத்தேரி ரயில் நிலையத்தில் இந்த சிறப்பு ரயில்கள் 5 நிமிடம் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com