இருவர் கைது
இருவர் கைதுpt desk

ஈரோடு: ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை தாக்கியதாக இருவர் கைது

ஈரோடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மதுபோதையில் இருந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
Published on

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் சி.எம் நகரில் நேற்றிரவு சித்தோடு காவல் நிலைய ஆய்வாளர் ரவி மற்றும் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கூட்டமாக இருந்த நபர்களை கலைந்து போகும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதில் அதே பகுதியை சேர்ந்த கோபால் (25) மற்றும் வினோத்குமார் (36) ஆகியோர் மது போதையில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Hospital
Hospitalpt desk
இருவர் கைது
சிவகங்கை | தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு - கண்கவரும் கழுகுப்பார்வை காட்சிகள்!

இதையடுத்து ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஆய்வாளர் ரவி மற்றும் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து இளைஞர்கள் இருவர் மீது அரசு ஊழியர்களை பணி செய்யாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்து தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com