எஸ்.பி.வேலுமணியுடன் நயினர் நாகேந்திரன்
எஸ்.பி.வேலுமணியுடன் நயினர் நாகேந்திரன்கோப்பு படம்

முன்னாள் அமைச்சர் SP வேலுமணி, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. ஏன்?

அதிமுக கொடியின் கரையுள்ள வேஷ்டி அணிவித்து எஸ் பி வேலுமணியை வரவேற்ற காட்சிகளை நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
Published on

செய்தியாளர் : மருதுபாண்டி

தமிழகத்தின் தற்போது உள்ள அரசியல் சூழலில் எதிரும் புதிருமாக உள்ள கட்சிகளாக அதிமுகவும் பாஜகவும் இருந்து வருகிறது. இரு கட்சிகளின் அரசியல் தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நெல்லையில் நடந்த அதிமுக கள ஆய்வுக்கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி, கூட்டத்திற்கு பின் நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் பாஜகவின் சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் இல்லத்திற்கு சென்றார்.

நயினர் நாகேந்திரனுடன் எஸ் பி வேலுமணி
நயினர் நாகேந்திரனுடன் எஸ் பி வேலுமணி கோப்பு படம்

அவரை அதிமுக கொடியின் கரைகொண்ட வேஷ்டி அணிவித்து நயினார் நாகேந்திரன் வரவேற்றார். பின்னர் அவரது இல்லத்தில் வைத்து இருவரும் அவர் உடன் வந்த முக்கிய நபர்களும் உரையாடினர்.

எஸ்.பி.வேலுமணியுடன் நயினர் நாகேந்திரன்
🔴LIVE | மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட், வயநாடு வாக்கு எண்ணிக்கை - நொடிக்கு நொடி அப்டேட் இதோ...!

இந்த சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், அதிமுக அமைப்பு செயலாளர் சின்னதுரை, நெல்லை மாவட்ட அதிமுக செயலாலாளர் கணேஷ்ராஜா, பாஜக இளைஞரணி மாநில நிர்வாகியும் நயினார் நாகேந்திரன் மகனுமான பாலாஜி மற்றும் அதிமுகவினர் இருந்தனர். இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் இல்ல விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

எஸ் பி வேலுமணி - நயினார் நாகேந்திரன்
எஸ் பி வேலுமணி - நயினார் நாகேந்திரன்

கூட்டனி முறிந்த கட்சிகளின் தலைவர்களாக இருந்தாலும் அதிமுகவில் இருக்கும் போது இருவரும் நன்கு பழகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com