ஜார்கண்ட்டில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது I.N.D.I.A. கூட்டணி... 56 இடங்களில் ஜே.எம்.எம். கூட்டணியும், 24 இடங்களில் பா.ஜ.க. கூட்டணியும் வெற்றி...
மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் அம்மாநில துணை முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிஸ் பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில், வரலாற்று வெற்றியை வயநாட்டில் பதிவுசெய்துள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி. இதையடுத்து, தனக்கு வாக்களித்தவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பதிவில்,
“வயநாட்டின் என் அன்புச் சகோதரிகள் மற்றும் சகோதரர்களே, நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றியில் மூழ்கிவிட்டேன். உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் புரிந்துகொண்டு உங்களுக்காக போராடுவேன். நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக ஒலிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!” என்றுள்ளார்.