“கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏன் பூங்கா அமைக்க வேண்டும்?” - சௌமியா அன்புமணி விளக்கம்

கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் ஏன் பூங்கா அமைக்க வேண்டும் என சௌமியா அன்புமணி விளக்கமளித்துள்ளார்.
சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணிPT

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தண்ணீர் அபாயங்கள் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அடுத்த 20 ஆண்டுகளில் சென்னை பல்வேறு சவால்களை சந்திக்கும்!

அப்போது மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய தலைவர் கிருஷ்ணகுமார் பேசுகையில் “காலநிலை மாற்றம் குறித்த தனி மனிதர்களின் விழிப்புணர்வு மிகவும் அவசியமாக உள்ளது. பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு இருந்தால்தான் எதிர் கொள்ளவிருக்கும் சவால்களை நம்மால் சந்திக்க முடியும். சென்னையை பொருத்த வரைக்கும் 20, 30 ஆண்டுகளில் பல்வேறு சவால்களை சந்திக்க உள்ளோம்.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

பருவ நிலை மாற்றத்தின் காரணமாக நீர் பாதுகாப்பு மிகவும் முக்கியமாக உள்ளது. கோடைகாலங்களில் அதிக அளவிலான வெப்பமும் மழைக்காலங்களில் அதிக அளவிலான மழை பொழிவும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் மழை நீரை சேகரிக்கும் கட்டமைப்புகளில் கவனம் செலுத்துவதின் தேவை உள்ளது” என்றார்.

சௌமியா அன்புமணி
இந்திய பொருளாதாரத்தில் 500பில்லியன் உற்பத்தியை AI ஈட்டும்! புதிய டிஜிட்டல் கட்டமைப்பும், சவால்களும்!

நகர்புறங்களில் நீர் மேலாண்மையின் பங்கு முக்கியமானது!

பின்னர் பேசிய பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, “நகர்ப் பகுதிகளில் அதிக அளவிலான மக்கள் தொகை இருப்பதன் காரணமாக நீர்நிலை மேலாண்மை மிகவும் முக்கிய அமைப்பாக உள்ளது. சிறந்த நகர்ப்புற பகுதியை நீர் மேலாண்மையை வைத்துதான் அடையாளப்படுத்த முடியும்.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

சென்னையின் நீர் நிலையாக கூவம், அடையாறு, கொற்றலை உள்ளிட்ட ஆறுகள் உள்ளது. அவற்றை தூய்மைப்படுத்தி சென்னையின் குடிநீர் ஆதாரமாக மாற்ற வேண்டும். நீர் மேலாண்மை முறையில் மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் வருங்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் தண்ணீர் அபாயங்களை எதிர்கொள்ள முடியும்.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக சென்னையில் ஏரி நிலங்களில் வீடு கட்டக்கூடிய சூழல் தற்போதும் நிலவி வருகிறது. அரசு அதிகாரிகள் கூட ஏரி நிலங்களில் வீடு கட்டியுள்ளனர். ஒரு சில கிராமப்புறங்களில் தண்ணீர் இல்லாததன் காரணமாகவே சென்னையை நோக்கி வாழ்வாதாரத்திற்காக காலநிலை அகதிகளாக மக்கள் இடம்பெயர்கின்றனர்” என்று பேசினார்.

சௌமியா அன்புமணி
’இதெல்லாம் இவர் எடுத்த புகைப்படங்களா!’ - இயற்கையை அதிகமாய் நேசித்த வெற்றி துரைசாமி! வைரல் ஃபோட்டோஸ்!

கோயாம்பேடு பேருந்து நிலையத்தை ஏன் பூங்காவாக மாற்றவேண்டும்?

கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தை ஏன் பூங்காவாக மாற்ற வேண்டும் என்பது குறித்து விளக்கமளித்த சௌமியா அன்புமணி, “கோயம்பேடு பேருந்து நிலையம் 30 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்டது. அதில் பூங்கா அமைத்தால், ஆயிரக்கணக்கான மரங்கள் அங்கு வைக்க முடியும். மக்கள் கூடுகின்ற இடமாகவும் மக்களின் மன அழுத்தத்தை போக்குகின்ற இடமாகவும் அந்த பூங்கா அமையும். பெங்களூர், டெல்லி போன்ற பெருநகரங்களில் எல்லாம் பெரிய அளவிலான பூங்காக்கள் உள்ளன. ஆனால் சென்னையில் அது போன்ற பூங்காக்கள் இல்லை” என்று கூறினார்.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் பொது பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியிருந்த நிலையில், அதற்கான விளக்கத்தை சௌமியா அன்புமணி கொடுத்துள்ளார்.

சௌமியா அன்புமணி
“வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காக..!” - வெற்றி துரைசாமி மறைவுக்கு ஓடோடி வந்த அஜித்குமார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com