\
TN Electricity Board Financial White Paper Released in Chennai
வெள்ளை அறிக்கை வெளியீடுPt web

"சோலார் திட்டத்திற்கு Party Fund" - அமைச்சர் நிர்மல்குமார்.. மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை வெளியீடு!

சென்னை மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல்குமார் இன்று வெளியிட்டுள்ளார்.
Published on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்திருந்தாலும், ஆட்சியமைக்க பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத நிலையில், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியமைத்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக கடந்த மே மாதம் 10-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அன்றைய தினமே, தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிடப்போவதாக தெரிவித்திருந்தார்.

விஜய்
விஜய்Pt web

அதன்படி, நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை கடந்த ஜூந் 16-ம் தேதி நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் வெளியிட்டார். அதில், தமிழ்நாடு 13 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்களை கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இந்தசூழலில் தான், மின்சாரத்துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் சமீபத்தில் தெரிவித்தார். அதன்படி இன்று சென்னை மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல்குமார் இன்று வெளியிட்டுள்ளார்.

TN Electricity Board Financial White Paper Released in Chennai
”சட்டப்பேரவையின் மரபையும்; முதல்வருக்கான மாண்பையும் காத்திட வேண்டும்” - திருமாவளவன் வேண்டுகோள்!

மின்சாரத்துறை வெள்ளை அறிக்கையில், மின் துறையில் மொத்தம் 65,921 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. மொத்த பணியிடங்கள் 1,40,635. அதில் 74,714 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தாலும், மக்களுக்கு சிக்கல் இல்லாமல் சேவை செய்கிறோம். 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சிகாலத்தில் 343 பேர் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2021 முதல் 2026 வரை 9,136 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். 2 மடங்காக உயர வேண்டிய வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது. வளர்ச்சியை நோக்கி எந்த ஒரு திட்டமும் துவங்கப்படவில்லை. 4 பேர் செய்யவேண்டிய வேலையை ஒருவர் செய்கிறார்கள். 30 ஆண்டுகள் பின்னோக்கி போய் விட்டோம். தி.மு.க. ஆட்சியில் எடுக்காமல் விட்ட 5,391 பணியாளர்களுடன் சேர்த்து 20,449 பேரை புதியதாக பணிக்கு அமர்த்தவுள்ளோம்.

நிர்மல்குமார்
நிர்மல்குமார்Pt web

2021 முதல் 2026 திமுக ஆட்சியில் ரூ.4,97,996 கோடி வருவாய், ரூ. 5,32,443 கோடி செலவு,  ரூ. 34,447 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது‌‌. மின்சார வாரியத்திற்கு தற்போது ரூ.2,47,130 கோடி கடன் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய அனல் மின் நிலையம் மற்றும் நீர்மின் நிலையம் கடந்த அரசு உருவாக்கவில்லை. சோலார் திட்டம் பெறுபவர்கள் Party fund  கொடுத்துள்ளனர். இந்த திட்டம் பெற முயற்சித்தவர்களிடம் கேட்டால் Party Fund குறித்து தெரியும். ஒரு வேலை Party fund கொடுத்து திட்டம் கிடைக்கவில்லை என்று இருந்தால் அவர்கள் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும். வங்கி தரவும் இந்த அரசு தயாராக இருக்கிறது. ஆனால் இதை பற்றி பேசினால் கோபப்படுகிறார்கள்.

2021 முதல் 2026 ஆம் ஆண்டில், மின்வாரியத்திற்கு கூடுதல் வருவாய் சுமார் ரூ.67 ஆயிரம் கோடி. கடைசி ஓராண்டில் மட்டும் (2025 முதல் 2026) ரூ.1.24 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் 2021 முதல் 2026 ஆம் ஆண்டில், (திமுக ஆட்சியில்) மின்வாரியத்தின் கடன் ரூ.87 ஆயிரம் கோடி உள்ளது. இவ்வளவு வரவு இருந்து, செலவும் செய்து, கடனும் வாங்கி உள்கட்டமைப்புகள் பெரிதாக மேம்படுத்தப்படவில்லை. 25 ஆண்டுகளை கடந்த டிரான்ஸ்பார்மரை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. மொத்தம் 4,47,603 டிரான்ஸ்ஃபர் உள்ளது. அதில், 42,808 டிரான்ஸ்ஃபர் 25 ஆண்டுகளை கடந்து விட்டது.  மின்வாரியத்தில் பணிமாறுதல் வேண்டி யாரும் பணம் கொடுக்க வேண்டாம். நிர்வாக காரணம் என்ற பெயரில் இடமாற்றம் இனி நடைபெறாது. வருடத்திற்கு இரண்டு முறை பணிமாறுதல் கவுன்சலிங் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Electricity Board Financial White Paper Released in Chennai
”வரைமுறையின்றி பேசுகிறார் ஆ. ராசா” - அமைச்சர் வன்னி அரசு விமர்சனம்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com