\
என் ஓட்டு உங்களுக்கு இல்லை: வைரலாகும் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாடல்

என் ஓட்டு உங்களுக்கு இல்லை: வைரலாகும் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாடல்

என் ஓட்டு உங்களுக்கு இல்லை: வைரலாகும் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாடல்
Published on

சசிகலா முதலமைச்சராக தேர்வானதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக சென்னையைச் சேர்ந்த இசைக்குழுவினர் முகநூலில் வெளியிட்டிருக்கும் பாடல் வேகமாகப் பரவி வருகிறது.

ராப் இசைப் பாடகி சோஃபியா அஷ்ரப் என்பவர், ‘’எனது ஓட்டு உங்களுக்கு இல்லை” என்ற வரிகள் கொண்ட பாடலை பாடி இசையமைத்துள்ளார். தனது குழுவினருடன் சேர்ந்து போயஸ் தோட்டப் பகுதியில் பாடலை இசைத்தபடி அந்தக் குழுவினர் செல்லும் காட்சி முகநூலிலும் சமூக வலைதளங்களிலும் விரைவாகப் பரவி வருகின்றது. “நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல” “ஜனநாயகம் மடிந்துவிட்டது” போன்ற வரிகள் அந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோப் பதிவை ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com