
சிவானந்தா குருகுலத்தின் பொதுச்செயலாளர் ராஜாராம் உடல்நலக் குறைவால் காலமானார்.
1974ஆம் ஆண்டு முதல் சிவானந்தா குருகுலத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்தவர் ராஜாராம். 67வயது நிரம்பிய சிவானந்தா ராஜாராம் உடல்நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிவானந்தா ராஜாராம் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். காட்டாங்குளத்தூரில் உள்ள சிவானந்தா குருகுலத்தில் ராஜாராம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சிவானந்தா குருகுலத்தின் பொதுச்செயலாளர் ராஜாராமின் சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.