Death
DeathFile Photo

சிவகாசி | சரக்கு தூக்கும் லிப்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு

சிவகாசியில் தனியார் அச்சகத்தில் பொருட்களை தூக்கும் இயந்திரத்தில் (லிப்ட்) இருந்து தவறி விழுந் 12 வயது பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: A.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முஸ்லிம் ஓடை தெருவைச் சேர்ந்தவர்கள் பாதுஷா - ரம்ஜான்பீவி தம்பதியர். இவர்களது மகன் முகமது ஆசிப் (12). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் முகமது ஆசிப் தனது சித்தியுடன், அவர் பணிபுரியும் தனியார் அச்சகத்துக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அச்சகத்தில் பொருட்களை ஏற்றும் இயந்திரத்தில் (லிப்ட்) முகமது ஆசிப் ஏறி விளையாடிய போது, திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில், காயமடைந்த சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

Death
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை|11 பிரிவு குற்றங்கள் என்னென்ன?

தகவல் அறிந்த சிவகாசி நகர் போலீஸார் சம்பவ இடத்pற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com