அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைமுகநூல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை|11 பிரிவு குற்றங்கள் என்னென்ன?

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு 11 பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த பிரிவுகளை விரிவாக பார்க்கலாம்.
Published on

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பை அறிவித்த சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, அவர் மீதான 11 பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதன்படி, மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல், மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல், வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல், உடலில் காயத்தை ஏற்படுத்துதல்,

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் | வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழக வீரர்கள் சாதனை!

விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல், மாணவியை கடுமையாக தாக்குதல், தனிநபர் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல், தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல், தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் பிரிவு 4 ஆகிய 11 சட்டப்பிரிவுகளின் கீழ் ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டு அரசு தரப்பில் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com