\
தற்கொலை
தற்கொலைFile Photo

சிவகங்கை| 12ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.. போலீஸார் விசாரணை!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 12ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 
Summary

சிவகங்கை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடல் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நந்தனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் – சரிதா தம்பதியினருக்கு 17 வயது மகள் இருந்துள்ளார். தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் தற்கொலை
பெண் தற்கொலைfile image

இதுகுறித்து காளையார்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் உடல் உடற்கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாணவி எதனால் இந்தமுடிவை எடுத்தார், இதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தற்கொலை
கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு நடந்தது துன்புறுத்தல் இல்லையா..? நீதிபதி கேள்வி!