கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை
கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லைpt

ரயிலில் இருந்து தொடர்ந்து பெண்களை தள்ளிவிடும் சைக்கோ ஹேமராஜ்.. யார் இவர்? அதிர்ச்சி தரும் பின்னணி!

வேலூரில் ஓடும் ரயிலில் 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கும் ஹேமராஜ், இதற்கு முன்னும் பெண்களை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
Published on

செய்தியாளர் - ச.குமரவேல்

வேலூரில் ஓடும் ரயிலில் நான்கு மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தள்ளிவிட்ட வழக்கில், தற்போது ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருப்பவர், ஹேமராஜ் (30). இவர் கே.வி.குப்பம் அருகேயுள்ள கீழ் ஆலத்தூர் அடுத்த பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர்.

இவர் பெண்கள் பயணிக்கும் ஆளில்லா பெட்டியை நோட்டமிட்டு தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை
”அரைமணி நேரம் கெஞ்சி போராடினேன்; இனி எந்த பொண்ணுக்கும் நடக்க கூடாது” - கர்ப்பிணியின் வேதனை குரல்!

இதற்கு முன் செய்த அதிர்ச்சிதரும் குற்றங்கள்..

முதலில் கடந்த 2022-ஆம் ஆண்டு, சென்னையில் நடந்த அக்னி பாத் வீரர்கள் தேர்வுக்காக சென்று திரும்பிய ஹேமராஜ், காட்பாடி ரயில் நிலையத்தில் காத்திருந்து நோட்டமிட்டு சென்னையிலிருந்து வேலூர் கண்டோன்மெண்ட் வரை செல்லும் பயணிகள் ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி உள்ளார்.

அப்போது அப்ப பெட்டியில் யாரும் இல்லாத நிலையில், சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மட்டும் பயணித்துள்ளார். அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்தவர், அவரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டுள்ளார். இது தொடர்பாக இருப்புப் பாதை காவல் துறையினர் ஹேமராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்ட நிலையில் 11 மாதம் சிறையில் இருந்துள்ளார்.

ஹேமராஜ்
ஹேமராஜ்

இரண்டாவதாக கடந்த 2024-ஆம் ஆண்டு, காதலித்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால், திருமணம் செய்துகொள்வதாக நம்பவைத்து அந்தப் பெண்ணை தனியாக வரவழைத்து கொலை செய்ததாக கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, அந்தவழக்கிலும் குண்டர் சட்டம் போடப்பட்டு மூன்று மாதம் சிறையில் இருந்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து தான் தற்போதும் கோவையிலிருந்து திருப்பதி சென்ற இன்டர்சிட்டி விரைவு ரயில் பெண்கள் பெட்டியில், ஜோலார்பேட்டை ரயில் நிறுத்தத்தில் ஏறி கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அடித்து கையை உடைத்து கீழே தள்ளி உள்ளார்.

இது தொடர்பான வழக்கில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஹேமராஜ்
ஹேமராஜ்

தொடர்ந்து ரயில் தொடர்பான குற்றச் செயலில் சைக்கோவாக செயல்பட்டு வரும் ஹேமராஜ்க்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை
வேலூர் | ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை.. தேசிய மகளிர் ஆணையம் முக்கிய உத்தரவு!

பாதுகாப்பு குறைபாடு..

ஹேமராஜ் ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பில் இருந்து தான் இன்டர்சிட்டி ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி உள்ளார். அந்த வகையில் ரயில் நிலையங்களில் முறையான நடைபாதை டிக்கெட் எடுக்கப்பட்டுள்ளதா அல்லது சந்தேகிக்கப்படும் நபர்கள் கண்காணிக்கப்படுகிறார்களா என காவல்துறையினர் முழுமையாக கண்காணித்து இருக்க வேண்டும்.

கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை
கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை

ஏற்கனவே இரண்டு பெரும் குற்றச்செயல்களில் கைதாகி சிறை சென்ற நபர், சர்வ சாதாரணமாக நடைமேடையில் உலாவி வந்து நோட்டமிட்டு பெண்கள் பெட்டியில் ஏறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை.. கூச்சலிட்டதால் ரயிலிருந்து கீழே தள்ளிய கொடூரர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com