செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிகோப்புப்படம்

புழல் சிறையிலுள்ள செந்தில்பாலாஜிக்கு உடல்நலக்குறைவு.. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி

புழல் சிறையிலுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Published on

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இந்நிலையில், செந்தில்பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

செந்தில்பாலாஜி
செந்தில்பாலாஜிpt web

இவருடைய வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் நாளை நீதிமன்றத்தில் இவர் ஆஜராக இருக்கிறார். இத்தகைய சூழலில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி - நீதிமன்றம் உத்தரவு

முன்னதாக சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலுதவி சிகிச்சைக்குப் பின் ஸ்டான்லி மருத்துவமனையில், மருத்துவர்கள் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com