“முதன்முறையாக விஜயகாந்த்தை பார்த்த அந்த தருணம்” - சீனு ராமசாமி

விஜயகாந்த்தோடு தனக்கு உள்ள நினைவுகளை பகிரும் இயக்குநர் சீனு ராமசாமி.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அப்படி இயக்குனர் சீனு ராமசாமி விஜயகாந்த் குறித்து நம்மிடையே பேசியபொழுது “நான் துணை இயக்குனராக இருந்த பொழுது, எங்கள் அலுவலகத்திற்கு பெரியவர் ஒருவர் வந்தார். என்னிடம் அவர், ‘கேப்டன் விஜயகாந்த் குழந்தைகளுக்கு பள்ளிக்கட்டணம் தருவார் என கேள்விபட்டேன்’ என்று சொல்லி உதவிகேட்டார். நான் உடனே அப்பெரியவரை விஜயகாந்த்தை பார்க்க கூட்டிச்சென்றேன். பெரியவர் கேட்டு வந்த தொகை மிகவும் குறைவு. விஜயகாந்த் அந்த பெரியவருக்கு அதிகமாகவே தந்தார். அதை அப்பெரியவர் என்னிடம் சொன்னபோது நெகிழ்ந்துபோனேன்” என்றார்.

சீனு ராமசாமி
🔴LIVE | RIP Vijayakanth | காலமானார் விஜயகாந்த்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com