\
Seeman Sings for NTK Candidate Karthika in Dharapuram Campaign
சீமான்Pt web

ஓட்டுப் போடப் போற பொண்ணே ஒதுங்கி நிக்காத! - பாட்டுப்பாடி வாக்கு சேகரித்த சீமான்!!

தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவுக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாட்டுப்பாடி வாக்கு சேகரித்தார்.
Published on

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6 ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், நாம் தமிழர்க கட்சி வேட்பாளர்களாக மதுராந்தகம் தொகுதியில், கோ. ஜானகிராமன், தாராபுரம் தொகுதியில் மு.கார்த்திகா ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் தான், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மு.கார்த்திகாவை, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.

சீமான்
சீமான்Pt web

அப்போது பேசிய அவர், ”மக்களின் காசை பெற மாட்டோம் எனக் கூறியவர்கள், இன்னொரு கட்சியில் வெற்றி பெற்றவர்களை பதவியிலிருந்து விலக வைத்து, தங்கள் கட்சியில் போட்டியிட வைப்பது என்ன மாதிரியான அரசியல்? ஆளும் கட்சியில் இருந்தால் தான் நல்லது செய்ய முடியும் என்றால், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு நல்லது செய்யமாட்டார்கள் என்று பொருளா? எதிர்க்கட்சியே இருக்கக் கூடாது என்பது எப்படிப்பட்ட ஜனநாயகம்” எனக் கேள்வி எழுப்பினார்.

Seeman Sings for NTK Candidate Karthika in Dharapuram Campaign
சினிமா பாணியில் கடத்தல்.. ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது.. சென்னை விமான நிலைத்தில் நடந்தது என்ன?

தொடர்ந்து பேசிய அவர், வாக்குக்கு காசு கொடுக்காமல் அங்கீகாரம் பெற்ற முதல் கட்சி நாம் தமிழர் தான். கூட்டத்தைப் பார்த்து மாஸ் எனப் போட்ட ஓட்டு இப்போது தூசாக மாறிவிட்டது. இங்கு மின்வெட்டு ஏன் என்று கேட்டால், அமைச்சர் நிர்மல் குமார் ‘பஞ்சாபைப் பார், பங்களாதேஷைப் பார்’ என்கிறார். எல்லாக் குடும்ப அட்டைகளுக்கும் 6 சிலிண்டர் எனக் கூறினார். ஆட்சிக்கு வந்தவுடன் 10 லட்சம் கோடி கடன் எனக் கூறுகிறார். தமிழ்நாட்டில் 100 நாள் ஆட்சியை விளம்பரப்படுத்த எல்லா அச்சு ஊடகங்களுக்கும் விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 100 நாள் ஆட்சி பற்றி, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் எதற்காக அச்சு ஊடகங்களில் முழுப் பக்கம் விளம்பரம் கொடுக்கப்பட்டது? 200 யூனிட் மின்சாரம் இலவசம் எனக் கூறினார். தற்போது மின்சாரமே இல்லை. ‘மின்சார கனவு’ என படம் உள்ளது; இப்போது மின்சாரமே கனவாகத் தான் உள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும், மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர்கள் தற்போது ஒரு தேவையற்ற தேர்தலைக் கொண்டு வந்துள்ளனர். எனவே நாம் தமிழர் வேட்பாளருக்கு வாக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும், ஓட்டுப் போடப் போற பொண்ணே ஒதுங்கி நிக்காத! கண்ட கண்ட சின்னம் கண்டு கலங்கி நிக்காத! உழைக்கும் மக்கள் சின்னம்; அது விவசாயி சின்னம் என்று பாட்டுப் பாடி, தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகாவுக்கு வாக்குச் சேகரித்தார்.

Seeman Sings for NTK Candidate Karthika in Dharapuram Campaign
Youtuber மாரிதாஸ்-க்கு சிக்கல்.. தவெக அமைச்சரின் அதிரடி.. நடந்தது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com