சீமான்
சீமான்எக்ஸ் தளம்

”திருப்பரங்குன்றத்தில் உள்ளது முருகன் கோவில்.. இங்கு ராமராஜ்யம் அமைக்க முயற்சி நடக்கிறது..” - சீமான்

திருப்பரங்குன்றத்தில் உள்ளது முருகன் கோவில் என்றும், இங்கு ராமராஜ்யம் அமைக்க முயற்சி நடக்கிறது என்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்..
Published on

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் நாம்தமிழர் கட்சி வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். வேட்பாளர்களை அவர் அறிமுகப்படுத்தினார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்புதிய தலைமுறை

உளுந்தூர்பேட்டையில் லோகேஸ்வரி, கள்ளக்குறிச்சியில் நாகம்மாள், சங்கராபுரத்தில் ரமேஷ், விழுப்புரத்தில் அபினயா பொன்னிவளவன், திண்டிவனத்தில் பேச்சுமுத்து, மயிலத்தில் விஜய் விக்ரமன் மற்றும் செஞ்சியில் கிருஷ்ணன் போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்தார்.

சீமான்
“தீட்டு என்பது மனித குலத்திற்கு எதிரானது” - திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக தமிழக அரசு வாதம்!

பின்னர் மேடையில் பேசிய அவர், “சாதி என்பது பன்னெடுங்காலமாக இந்த சமூகத்தில் தொற்றியுள்ள நோய். 12-லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மட்டும் இருந்தால் தாழ்த்தப்பட்டவர்களாக பட்டியலின மக்கள் இருந்திருக்க மாட்டார்கள்.. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்சம் 10- லட்சம் ஏக்கர் நிலமாவது மீட்போம்.. முதலில் கடற்கரையில் உள்ள சாமாதி இடங்களை மீட்பேன்.. எதிர்த்து கேள்வி கேட்க வேண்டியவர்கள் திராவிட கட்சிகளோடு கூட்டணி வைத்ததால்தான் பஞ்சமி நிலங்களை மீட்க முடியவில்லை.

தேவேந்திர குல வேளாளர் மக்கள் நீண்ட காலமாக தங்களை பட்டியல் இனத்திலிருந்து விடுவியுங்கள் என போராடுகிறார்கள். ஒத்த ரூபாய் காசு கொடுக்காமல், குவாட்டர் கொடுக்காமல் கூடிய தத்துவகூட்டம் நாம் தமிழர் கூட்டம். இது தற்குறி கூட்டம் அல்ல... எங்களுக்கு வேண்டியது சலுகைகள்அல்ல எங்களது உரிமைகள்.

சீமான்
சீமான் சீமான்

நீண்ட காலமாக சாதிவாரி கணக்குஎடுப்பு வேண்டும் என கோரிக்கை வைத்தவர்மருத்துவர் ராமதாசு. ஆணை முத்து இல்லை என்றால் இந்த உரிமை கிடைத்திருக்காது. சாதிவாரி கணக்கெடுப்பு தான் சரியான சமூக நீதி என்றும் 10.5% இட ஒதுக்கீடு வேண்டாம் அவர்கள் எண்ணிக்கை ஏற்ப பகிர்ந்து கொடுப்பதுதான் உண்மையாக சமூகநீதி.. 10-நாட்களில் SIR கொண்டு வரும் போது10 மாதங்களில் சாதிவாரி கணக்குஎடுப்பைநடத்த முடியாதா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்திய துணை கண்டத்தில் சமூக நீதிஎன்ற வார்த்தையை அதிகம் உச்சரிப்பது திராவிடஆட்சி தான். ஆனால் இவர்கள் கூட்டணி வைத்துள்ள கர்நாடாக, ஆந்திரா உள்ள காங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல பிறமாநிலங்களிலும் சாதி வாரிகணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது என கூறினார்.

சீமான்
திருப்பரங்குன்றம்| ”அனுமதிக்க முடியாது” வாக்குவாதம் செய்த இந்துமுன்னணி அமைப்பினர்.. மறுத்த போலீசார்!

தொடர்ந்து பேசிய அவர், இந்த நாட்டின் முதல் குடிமகள் திரெளபதி முர்முவால் கூட கோவிலுக்குள் நுழைய முடியாத நிலை உள்ள எனவும், 28 விழுக்காடு மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்குகிறார்கள் என்றால் அதற்கு சாதி, மதவேறுபாடுகள் தான் காரணம் என்றும், சமச்சீர் பாடதிட்டம் இருக்கு ஆனால் சமச்சீரான கல்வி மிகவும் பின் தங்கிய தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். மேலும் திருப்பரங்குன்றத்தில் உள்ளது முருகன்கோவில், இங்கு ராமராஜ்யம் அமைக்க முயற்சிநடக்கிறது தெரிவித்தார்.

சீமான்
”தமிழ்நாட்டில் இருந்து திமுக துடைத்து எறியப்படும்” - மத்திய அமைச்சர் அமித் ஷா நேரடி சவால்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com