சட்டமன்றமா? பிக்பாஸ் நிகழ்ச்சியா? - சீமான் கேள்வி!!
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றிருக்கிறார். இதற்கிடையில், அவரின் அரசியல் வருகைக்குப் பிறகு, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே அன்றாட அரசியல் நிகழ்வுகளை கவனிப்பது பரவலாக அதிகரித்திருக்கிறது. அதேபோல, தமிழக அரசின் சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்தான நேரலை நிகழ்வுகளும் பெரும்பாலானோரால் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.
இந்தச்சூழலில் தான், சட்டமன்றம் பிக்பாஸைப் போல உள்ளது என மக்கள் கூறுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை நடைபெற்ற பூலித்தேவன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சீமான் இன்று கலந்து கொண்டுப் பேசினார்.
அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும் என்று சொல்லவில்லை. புரட்சித் தமிழாய்ந்த தமிழ் மகன் தான் தமிழகத்தை ஆளவேண்டும். சட்டப்பேரவையில், அமைச்சர்கள் தமிழை பார்த்து படிக்கும் போதே 10, 20 தவறுகள் வருகிறது.
இதையும் படிக்க : ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக் குறிப்பு - 6 | தனி மருத்துவர் கிளினிக்கை மூடக் காரணம்!
தமிழ் இனத்திற்கு வரும் எத்தனை பிரச்னைகளுக்காக நாம் போராடியிருக்கிறோம். ஆனால், சர்கார் பட பேனரை கிளித்தது தான் சர்வதேச பிரச்னை என்பது போல் சட்டப்பேரவையில் ஒருவர் பேசுகிறார். மீனவனை சுட்டார்கள் போராட்டம்,, காவிரியில் தண்ணீர்வரவில்லை ,கச்சத்தீவு மீட்கப்பட வில்லை, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. ஆனால் Is not Our Problem Only Problem is Sarkar Poster என்பது போல உள்ளனர்.
சட்டமன்றம் தியேட்டர் போல உள்ளது; திரையங்கில் உட்கார்ந்துள்ளது மாதிரியே இருக்கிறது. ஆல் இஸ் வெல்-னு சொல்கிறார்கள். முதலமைச்சரை பார்க்க LED வேண்டும் என்கிறார்கள், அதையும் ரசிக்கிறார்கள், சட்டமன்றம் ரியல் பிக்பாஸ் போலவே உள்ளது அருமையான எண்டர்டெயிண்மெண்டாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

