சீமான் - விஜய்
சீமான் - விஜய்pt

’சாதி, மத போதைக்கு இணையானது திரைப்போதை.. நடிகனுக்கு அரியணையா?’ - விஜயை தாக்கிப் பேசிய சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் பேசிய சீமான், தவெக தலைவர் விஜயை தாக்கிப்பேசும் தொணியில் உரையாற்றினார்.
Published on
Summary

மதுரையில் மரங்களின் மாநாட்டில் பேசிய சீமான், திரைப்போதை சாதி, மத போதைக்கு இணையானது என்று கூறி, நடிகர் விஜயை விமர்சித்தார். அவர், 'நடித்தால் நோட்டை தருவோம், நடிப்பை நிறுத்தினால் நாட்டை தருவோம்' எனக் கேள்வி எழுப்பினார். சீமான், திரையுலகின் தாக்கத்தை சுட்டிக்காட்டி, சமூகத்தின் மீது அதன் தாக்கத்தைப் பற்றி பேசினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக யாரும் கவனிக்காத விசயங்கள் சார்ந்த மாநாடுகளையும், அதற்கான அவசியத்தையும் நாம் தமிழர் கட்சியும், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரையில் ஆடு, மாடுகளின் மாநாடு ஒன்றை நடத்திய சீமான், தற்போது சென்னைக்கு அருகில் மரங்களின் மாநாடு என்ற பெயரில் புதிய மாநாட்டை நடத்தினார்.

சீமான்
சீமான்

இயற்கையை நேசிக்கும் மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பூவுலகின் நண்பர்கள் போன்ற பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்ட இம்மாநாட்டில் பேசிய சீமான், இது வெறும் மர மாநாடு அல்ல, உயிர்காற்றை தரும் நம் தாய்க்கு நன்றி செலுத்தும் மாநாடு என்று தெரிவித்தார்.

சீமான் - விஜய்
”1000 மரங்கள் நட்டால் இறுதிசடங்கில் அரசு மரியாதை..” - மரங்கள் மாநாட்டில் சீமான்

விஜயை சீண்டும் வகையில் பேசிய சீமான்..

தவெக கட்சியையும், கட்சித் தொண்டர்களையும், தவெக தலைவர் விஜயையும் தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் விமர்சித்து வருகிறார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தவெகவினரை அணில் என்று கூறி சீமான் விமர்சித்த நிலையில், தவெக தலைவர் விஜய் மதுரை மாநாட்டில் சிங்கம் கதை கூறி பதிலடி கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் மரங்களின் மாநாட்டில் பேசிய போதும் தவெகவினரை சீமான் சீண்டும் வகையில் பேசியுள்ளார். மேடையில் பேசிய அவர், “இந்த காட்டுக்குள் புலிகள் நுழைந்த உடனேயே ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை. அணில்களுக்கும் சேர்த்து தான் காடுவளர்க்க நாம் பாடுபடுகிறோம்” என்று தொடக்க உரையின்போதே பேசினார்.

மேலும், “நான் ஒரு கருத்தை சொன்னால் சிரிப்பார்கள், அதே கருத்தை வேறொரு நடிகர் சொன்னால் ரசிப்பார்கள். அதற்காக நான் என்ன நடித்துவிட்டா திரும்ப வரமுடியும். நல்லகண்ணு யாரென்று தெரியாததால்தான் நடிகன் நாடாளத் துடிக்கிறான். நீ பின் செல்கிறாய். கலையை போற்றலாம், கொண்டாடலாம். ஆனால் எங்கே வைக்க வேண்டுமோ அங்கு வைக்க வேண்டும்.

இந்த நாட்டில் சாதி, மதம், மது என்ற 3 போதைகளுக்கு எதிராக போராட கூட்டம் இருக்கிறது, ஆனால் இந்த 3 போதைகளுக்கும் இணையான போதை திரைப்போதை, திரை மயக்கம். இதற்கு எதிராக ஒருவரும் பேசுவதில்லை.

ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன், ஒப்பனை கலைந்த உடன் அரியணை என்பது நீங்கள் ஏற்கிறீர்களா, நீங்கள் தமிழ் சமூகத்தின் பிள்ளையா. நடித்தால் நோட்டை தருவோம், நடிப்பை நிறுத்தினால் நாட்டை தருவோம் என்பதை நீங்கள் ஏற்பீர்களா? அறிவார்ந்த தமிழ் சமூகத்தின் பிள்ளையா நீ” என்று நடிகர் ஆட்சி செய்ய நினைப்பது சரியா என்ற கேள்வியை முன்வைத்து பேசினார்.

சீமான் - விஜய்
”வர கோவத்துக்கு ஓங்கி குத்த வேண்டும்..” தவெக தலைவர் விஜயை ஒருமையில் பேசிய நடிகர் ரஞ்சித்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com