சீமான்
சீமான்pt web

தேவைப்பட்டால் மீண்டும் விசாரணை.. ‘ஒத்துழைப்பேன்’ - சீமான்

நடிகை அளித்த பாலியல் புகார் குறித்த வழக்கு விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சீமான் விசாரணைக்கு ஆஜர்.. நேரடிக்காட்சிகள்

முதலமைச்சருக்கு வாழ்த்து

”தமிழ்நாடு முதலமைச்சர் அப்பா ஸ்டாலினுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்..” - சீமான்

சீமான் செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர்களைச் சந்த்ித்த சீமான், “அதே பழைய கேள்விகளைத்தான் கேட்டனர். இதற்கு முன் வேறு ஆய்வாளர் கேட்டார். தற்போது அதே கேள்விகளைத்தான் கேட்டனர். தேவைப்பட்டால் அடுத்த விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்; சரி எனக் கூறியுள்ளேன். 3 மாத காலம் அவகாசம் இருந்த நிலையில், 3 நாட்களில் விசாரணையை முடிக்க நினைத்தது ஏன்? காவல் நிலையத்திற்கு தாமதமாக வர காவல்துறையினர்தான் காரணம். காவல் துறையினருக்கு அரசு தரப்பில் இருந்து அழுத்தம் இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்னை கைது செய்து தலைவர் ஆக்கினார். இவர்கள் என்னை கைது செய்து கைது செய்து முதல்வர் ஆக்கிவிடுவார்கள். விஜய் உடன் அன்பு என்றும் குறையவில்லை. அரசியல் ரீதியாக வேறு வேறு இடத்தில் இருக்கிறோம்.” என்றார்.

விசாரணை நிறைவு

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் அன்புக்கரசு,, துணை ஆணையர் அதி வீரபாண்டியன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் இருந்து 50 லட்சம் பணம் வாங்கினீர்களா? என்ற கேள்வி காவல்துறையினர் தரப்பிலிருந்து கேட்கப்பட்டுள்ளது.

63 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாகவும் இன்னும் கூடுதலாக கேள்விகள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் இதுதொடர்பாக மீண்டும் விசாரணை செய்வதற்காக சம்மன் கொடுப்பது தொடர்பாக அவரிடமே ஒரு தேதியை காவல்துறையை கேட்டிருப்பதாக தெரியவந்துள்ளது

விசாரணை நிறைவு

விசாரணை முடிவடைந்த நிலையில் காவல்துறையினர் காவல் நிலையத்தை விட்டு வெளியில் வந்தனர். விசாரணைக்குப் பின் சீமானிடம் கையெழுத்து பெற்றதாகத் தகவல்

சீமானிடம் விசாரணை நிறைவு பெற்றது.

சென்னை வளசரவாக்கத்தில் சீமானிடம் நடைபெற்ற விசாரணை நிறைவுபெற்றது. ஒருமணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போது முடிவுபெற்றுள்ளது. சரியாக 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட விசாரணை 11.15 அளவில் நிறைவு பெற்றுள்ளது. 53 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல்..

கைதாக வாய்ப்பில்லை

நடிகை பாலியல் புகார் வழக்கில் சீமான் இன்று கைதாக வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவல் நிலையத்தில் நடப்பது என்ன? முழுமையாக விளக்கும் செய்தியாளர்..

காவல் நிலையத்திற்குள்ளே அனுமதிக்காததால் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீரப்பன் மகள் வித்யாராணி

சாட்டைதுரை முருகன் உள்ளே அனுமதிக்கப்படவில்லை

காவல் துறையினரிடம் நாதக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி

சீமானிடம் விசாரணை

சீமானிடம் கோயம்பேடு காவல் ஆணையர் அதிவீரபாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார். அவருடம் வளசரவாக்கம் காவல் உதவி ஆணையர் செம்பேடு பாபுவும் விசாரணை நடத்தி வருகிறார்

காவல்துறையினரிடம் வீரப்பன் மகள் வித்யாராணி வாக்குவாதம். உள்ளே விடாததால், வீரப்பனின் மகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வளசரவாக்கம் காவல்நிலையத்திற்குள் சென்றார் சீமான். காவல்நிலையம் அருகே அரை மணி நேரம் காத்திருந்த பின் காவல்நிலையத்தில் சீமான் ஆஜரானார்

முன்னதாக காவல் நிலையத்திற்கு வந்த சீமான்... காட்சிகள்

வளசரவாக்கம் காவல்நிலையப்பகுதியில் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்கள் காத்திருக்கின்றன.

வளசரவாக்கம் காவல்நிலையம் செல்ல ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வளசரவாக்கம் காவல்நிலையம் செல்ல ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீமானின் காரை மட்டும் அனுமதித்த காவல்துறையினர் மற்ற கார்களைத் தடுத்து நிறுத்தினர்.

அனுமதி மறுப்பு

வளசரவாக்கம் காவல்நிலையம் அருகே குழுமியுள்ள நாதக நிர்வாகிகள் தடுப்புகளைத் தாண்டி செல்ல முயற்சித்து வருகின்றனர்.. காவல்துறையினர் அனுமதி அளிக்காத நிலையில் நாதகவினருக்கும் காவல்துறையினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது..

சீமானின் காரை காவல்நிலையம் வரை அனுமதிக்க வேண்டுமென காவல்துறையினருடன் நாதகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..

சீமான் ஆஜஎராக உள்ள வளசரவாக்கம் காவல்நிலையத்தில் 300 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் வருகையால் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

நடிகை அளித்த பாலியல் புகார் குறித்த வழக்கு விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சீமானுடன் மனைவி கயல்விழி வருவார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், கயல்விழி இல்லாமல் சீமான் மட்டும் வந்துள்ளார். வழக்கறிஞர் குழுவுடன் வந்த சீமானைக் கண்டதும் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர். நள்ளிரவு தாண்டியும் விசாரணை நீளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com