சாத்தூர்: பட்டாசு ஆலை வெடி விபத்து - உயிரிழப்பு 5 ஆக உயர்வு

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடி விபத்து - உயிரிழப்பு 5 ஆக உயர்வு
சாத்தூர்: பட்டாசு ஆலை வெடி விபத்து - உயிரிழப்பு 5 ஆக உயர்வு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாத்தூர் அருகே மஞ்சள்ஓடைபட்டியில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் மதுரை, நெல்லை, கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் 60 சதவீத தீக்காயம் மற்றும் தலைக்காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முனியசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இருவர் நெல்லை மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com